ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஆனது ஓய்வூதியம் பெறுவோர்கள் அவர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இனிமேல் வங்கிகளுக்கோ அல்லது தபால் நிலையங்களுக்கோ செல்ல வேண்டியதில்லை என்றும் வீட்டிலிருந்தபடியே அதனை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இந்த வழிமுறையை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது, அதேசமயம் பல ஓய்வூதியதாரர்கள் ஏற்கனவே அவர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு!
ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதலாகும், இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவையாகும். இது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆயுள் சான்றிதழை இதன் மூலம் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால் அல்லது 2021 டிசம்பரில் டெபாசிட் செய்திருந்தால், நவம்பர் 2022-ல் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இப்போது வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் எப்படி சமர்ப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
1) ஜீவன் பிரமானைச் சமர்ப்பிப்பதற்காக டோர்ஸ்டெப் பேங்கிங் செயலியை டவுன்லோடு செய்யவேண்டும்.
2) உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள வங்கியை தேர்ந்தெடுக்கவும்.
3) உங்கள் ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
4) இப்போது பணம் செலுத்தவேண்டும்.
5) உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
இந்த செயல்முறையை முடித்ததும் உங்கள் வீட்டுக்கு எந்த ஏஜென்ட் வருவாரோ அவரின் பெயர் மற்றும் முகவரி உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும். சிறிது நேரத்தில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் செயல்முறையை முடிக்க அந்த குறிப்பிட்ட ஏஜென்ட் உங்கள் வீட்டிற்கு வருவார். மேலும் ஓய்வூதியம் பெறுவோர் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ