ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

ITR filing: ஆன்லைனில் வருமான வரிக்கணக்கு தாக்கல் (ஐடிஆர்) செய்யும்போது ஏதேனும் பிழை ஏற்படாமல் இருக்க நாம் சில தவறுகளை கவனிக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2023, 09:02 AM IST
  • தவறான ஐடிஆர் படிவத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.
  • படிவம் 16 மற்றும் படிவம் 26AS-ல் உள்ள தகவல்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
  • திருத்தப்பட்ட ஐடிஆரைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க! title=

ITR filing: பலரும் தாங்களாகவே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துகொள்ள விரும்புகின்றனர், இதற்கென வருமான வரித்துறை ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது.  எல்லோராலும் தனிப்பட்ட முறையில் சரியானதாக ஐடிஆர்-ஐ தாக்கல் செய்துவிட முடியாது, நாம் சில சமயங்களில் அதில் ஏதேனும் தவறுகள் செய்துவிடக்கூடும்.  இதனால் நமது கோப்புகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும், எனவே  ஆன்லைனில் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

1) வரி செலுத்துபவர்கள் செய்யக்கூடிய பொதுவான தவறுகளில் ஒன்று தான் தவறான ஐடிஆர் படிவத்தைப் பயன்படுத்துவது, இது அவர்களின் சமர்ப்பிப்பை ஐடி துறை நிராகரிக்க காரணமாகிறது.  எனவே ஐடிஆர் படிவத்தை நீங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.  சரியான முறையில் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான எடுத்துக்காட்டுகள்,

ஐடிஆர் படிவம் 1: சம்பளம் பெறும் நபர்கள்
ஐடிஆர் படிவம் 2: முதலீட்டு மூலதன ஆதாயங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள்
ஐடிஆர் படிவம் 3: சுயதொழில் செய்து வணிக லாபத்தில் வருமானம் பெறும் நபர்கள்

மேலும் படிக்க | 7th Pay Commission: மகிழ்ச்சியின் உச்சியில் ஊழியர்கள்... மீண்டும் ஒரு ஊதிய உயர்வு!

2) முக்கியமான ஆவணமாக விளங்கும் படிவம் 26AS-ல் தனிநபராது வருமானம் பற்றிய தகவல்கள் இருக்கும், இதில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரி, மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்), செலுத்திய சுய மதிப்பீட்டு வரி மற்றும் வரி வரவுகள் ஏதேனும் இருந்தால் படிவம் 26AS மற்றும் முதலாளியின் படிவம் 16-ல் உள்ள தகவல் பொருந்தாமல் போகலாம்.  எனவே, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 16ல் உள்ள உண்மையான தகவல்களை படிவம் 26AS-ல் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது.

3) பெரும்பாலான மக்கள் வங்கி கணக்குகளை வைத்திருக்கின்றனர், உங்களிடம் ஏதேனும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குகளின் தகவல்களை உங்களின் ஐடிஆர்-ல் தெரிவிக்க வேண்டும்.  நிதியாண்டில் எந்தெந்த வங்கி கணக்குகளை நீங்கள் மூடியுள்ளீர்கள் என்பது குறித்த தகவல்களையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

4) சம்பளம் மற்றும் வணிகம் தவிர, குடியிருப்பு அல்லது வணிகச் சொத்தின் வாடகை, நிலையான வைப்புத்தொகையின் வட்டி, மூலதன ஆதாயம் போன்ற பிற பணம் சம்மந்தப்பட்ட தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.  உங்கள் வருவாய் ஆதாரங்கள் அனைத்தையும் சட்டப்படி நீங்கள் பட்டியலிட்டு காண்பிக்க வேண்டும்.  நிதியாண்டில் நீங்கள் வேலை மாறியிருந்தால், உங்களின் முந்தைய வேலையின் வருமானத்தை காண்பிக்க வேண்டும்.

5) வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்த 120 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் பெங்களூரில் உள்ள ஐடி துறையின் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (சிபிசி) ஐடிஆர்-V-ன் கையொப்பமிட்ட நகலை வழங்க வேண்டும்.  ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் கையொப்பத்தை சமர்பிக்கவிட்டால் உங்களது கோப்பு அங்கீகரிக்கப்படாது.

6) சம்பளம் பெறுபவர்களின் சம்பளத்தில் இருந்து பொருத்தமான வரியை உங்கள் முதலாளி டிடிஎஸ் வடிவில் எடுத்துக்கொள்வதால் நீங்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்த வேண்டிய தேவையில்லை.  நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது உங்கள் சம்பளத்தைத் தவிர வேறு மூலங்களிலிருந்து வருமானம் பெற்றிருந்தாலோ, நீங்கள் மேம்பட்ட வரியைச் செலுத்த வேண்டும்.

7) ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏற்படும் பிழைகள் அல்லது தவறுகளைச் சரிசெய்வதற்கு, திருத்தப்பட்ட ஐடிஆரைத் தாக்கல் செய்ய வேண்டும்.  தவறான நிதித் தகவல்கள், தவறான விலக்குகள் போன்ற விஷயங்களை தெரிவிக்க வேண்டும்.  ஐடிஆரைச் சரிபார்க்கும்போது, ​​நீங்கள் ஏதேனும் பிழைகள் அல்லது தவறுகளைக் கண்டறிந்தால், திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | Old Pension Scheme: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட், உருவாகிறது புதிய NPS குழு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News