வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது என்பது அவ்வளவு எளிமையான காரியமல்ல, ஏனெனில் இதற்கு நீங்கள் உங்களது பல முக்கியமான ஆவணங்களை சரிபார்த்து அதன் பின்னர் இந்த செயல்முறையை நீங்கள் முடிக்க வேண்டும். கணக்கை நீங்கள் தாக்கல் செய்யும்போது ஏதேனும் முக்கியமான ஆவணம் விடுபட்டு போயிருந்தாலோ அல்லது ஏதேனும் தகவல் தவறாக இருந்தாலோ உங்களுக்கு சிக்கல் ஏற்படும். ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செயல்முறை இன்னும் டிராஃப்டில் இருந்தால் அந்த செயல்முறையை முடிக்க வருமான வரித்துறை நினைவுபடுத்தும் வகையில் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தகவலை அனுப்பும்.
மேலும் படிக்க | இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்
வருமான வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்துவிட்டால் மட்டும் இந்த ஐடிஆர் தாக்கல் செயல்முறை முடிந்துவிடாது. வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமான ஆதாரங்களை சரிபார்க்க வேண்டியது அவசியம், இந்த சரிபார்ப்பை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் என இரண்டின் வாயிலாகவும் செய்து முடிக்கலாம். ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் சரிபார்ப்பை ஆதார் ஓடிபி, வங்கி கணக்கு, நெட் பேங்கிங் அல்லது டிமேட் கணக்குகள் மூலம் சரிபார்க்கலாம். அதுவே நீங்கள் ஆப்லைனில் சரிபார்க்க வேண்டுமானால் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சென்ட்ரலைஸ்ட் ப்ராசஸிங் சென்டர்(சிபியூ) மூலம் சரிபார்க்க வேண்டும்.
இதுதவிர ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டல் மூலமாகவும் சரிபார்த்து கொள்ளலாம். ஒரு தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை நிர்ணயித்த காலத்திற்குள் நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10,000 வரை உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறுகள் அல்லது தாமதம் ஏற்பட்டால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும், இதனால் நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ