மகிழ்ச்சி... சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை) இருந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2022, 09:31 PM IST
  • சிறு சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பானது.
  • பண வீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தில் 190 அடிப்படை புள்ளிகளை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
மகிழ்ச்சி... சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு! title=

கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி  விகிதமும் 6.9 இல் இருந்து 7 ((10 அடிப்படை புள்ளிகள் உயர்வு)) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் முதிர்வு காலத்திலும் (Maturity Period) ஒரு மாதம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 124 மாதங்கள் இருந்தது, தற்போது 123 மாதங்களாக குறைந்துள்ளது. தபால் அலுவலகத்தின் 2 ஆண்டு கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் 5.5 இல் இருந்து 5.7 ஆக 20 அடிப்படை புள்ளிகளையும்,  3 ஆண்டு கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 5.5இல் இருந்து 5.8 ஆக 30 அடிப்படை புள்ளிகளையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 7.4 லிருந்து 7.6 ஆகவும் (20 அடிப்படை புள்ளிகள் உயர்வு), மாதாந்திர வருமான கணக்கு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 6.6 முதல் 6.7 (10 அடிப்படை புள்ளிகள் உயர்வு) ஆகவும் உயர்த்தி, கடந்த செப்.29ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சேமிப்பு வைப்பு நிதி திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற பிற திட்டங்களின் வட்டி விகித்தில் எந்த மாற்றமும் இல்லை. 

மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!

முன்னதாக, நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அரசாங்கப் பத்திரங்களின் சந்தை மதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.

சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் என்ன?

அவை பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு விருப்பங்களை எளிதாக்குவதற்கும் அதே நேரத்தில் வளர்ச்சிக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் உருவாக்கப்பட்டவை. சிறு சேமிப்பு திட்டங்களில் சேமிப்பு வைப்பு நிதி, தபால் அலுவலக வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாத வருமான கணக்கு திட்டம், ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க |  இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News