வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களா நீங்கள்... உங்களுக்காக ஒரு செய்தி!

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் நாட்டில் வசிக்கும் தங்கள் குடும்பத்தாருக்கு நிறைய உதவி செய்கிறார்கள் என கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. 

Last Updated : Nov 29, 2019, 10:32 AM IST
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களா நீங்கள்... உங்களுக்காக ஒரு செய்தி! title=

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் நாட்டில் வசிக்கும் தங்கள் குடும்பத்தாருக்கு நிறைய உதவி செய்கிறார்கள் என கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. 

அந்தவகையில் கடந்த 2018-ஆம் ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தனது நாட்டுக்கு சுமார் 78.6 பில்லியன் டாலர்களை (சுமார் 5.5 லட்சம் கோடி) அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைப்பான இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. 

சுமார் 1.75 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர். நீங்கள் சராசரியை எடுத்துக் கொண்டால், வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் நாட்டிற்கு சுமார் 3.15 லட்சம் ரூபாயை அனுப்புகிறார்கள் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆக, உலக பணம் பறிமாற்றத்தில் இந்தியாவின் பங்கு 14 சதவீதம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

ஐக்கிய நாடுகளின் அமைப்பான இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 2018-ஆம் ஆண்டில் மொத்த பணம் பறிமாற்றம் 689 பில்லியன் டாலராக இருந்தது. இந்த பட்டியலில் 67.41 பில்லியன் டாலர் பணம் அனுப்பிய சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

2019-ஆம் ஆண்டினை பொறுத்தவரையில் ஆண்டின் நடுப்பகுதியில், சுமார் 17.5 மில்லியன் (1.75 கோடி) இந்தியர்கள் வெளிநாட்டில் வசிப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

2010 மற்றும் 2015-க்கு இடையில் 53.48 பில்லியன் டாலர்களை பணம் பறிமாற்றம் செய்த இந்தியா பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கூறப்போனால் 2010-ஆம் ஆண்டில், இந்த தொகை 53.48 பில்லியன் டாலராக இருந்தது, இது பின்னர் 2015-ஆம் ஆண்டில் 68.91 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதவாவது ஐந்து ஆண்டுகளில், பணம் அனுப்புவது சுமார் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2015-18க்கு இடையில் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்த அன்னிய நேரடி முதலீடு 2018-ல் $38 பில்லியனாக வந்தது
மறுபுறம், அந்நிய நேரடி முதலீடு பற்றி பேசும்போது, ​​2018-ல் இந்தியாவில் மொத்த அன்னிய நேரடி முதலீடு 38 பில்லியன் டாலர்கள். இந்த விஷயத்தில் இந்தியா கடந்த ஆண்டு சீனாவை முந்தியது. சீனாவில் அன்னிய நேரடி முதலீடு 2018-ல் மொத்தம் $32 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Trending News