கடந்த 2019 ஜூலை மாதத்திற்கு பின் டிசம்பர் மாதம் இந்தியாவின் உற்பத்தித்துறை செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக IHS மார்கிட் (IHS Markit) நடத்திய மாதாந்திர கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில் படி PMI எனப்படும் பர்சேசிங் மானேஜர் இண்டெக்ஸ்-ன் (Purchasing Managers' Index) புள்ளிகள் நவம்பர் மாதத்தில் இருந்து 0.15 புள்ளிகள் அதிகரித்து இருப்பதா குறிப்பிட்டுள்ளது. முன்னதா கடந்த நவம்பர் மாதத்தில் புள்ளிகள் ஆனது 51.2-ஆக இருந்ததாகவும், டிசம்பர் 52.2-ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த 10 மாதங்களாக நடைபெற்ற வலிமையான கூட்டு முயற்சிகளால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக IHS மார்கிட் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து IHS மார்கிட் முதன்மை பொருளாதார நிபுணர் பொலியானா டி லிமா தெரிவிக்கையில்., "தொழிற்சாலைகள் தேவைக்கு ஏற்ப தங்கள் உற்பத்தியை மிகப் பெரிய அளவில் உயர்த்தியதன் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் உள்ளீட்டு கொள்முதல் மற்றும் வேலைவாய்ப்புகளில் புதுப்பிக்கப்பட்ட அதிகரிப்புகளும் இருந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.
கணக்கெடுப்பின்படி, புதிய பணி உத்தரவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. விரிவாக்கத்தின் வேகம் ஜூலை முதல் மிக வேகமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்தியாவில் மொத்த விற்பனை அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட அவர், தொடர்ச்சியாக 26-வது மாதமாக புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் விரிவடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்திக்கான PMI புள்ளிகள் கடந்த 29 மாதங்களாக தொடர்ந்து 50 புள்ளிகளுக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது. PMI புள்ளிகள் 50-க்கு மேல் இருந்தால் விரிவாக்கம் என்று பொருள். 50-க்கு கீழே இருந்தால் வீழ்ச்சி என பொருள். எவ்வாறாயினும் "கணக்கெடுப்பின் போது வணிக நம்பிக்கையின் மீது ஒரு எச்சரிக்கை உணர்வு இருப்பது தெளிவாகியுள்ளது.
இது சந்தை நிலைமைகள் குறித்த கவலைகளை பிரதிபலிக்கிறது, இந்த எச்சரிக்கை உணர்வு வேலைவாய்ப்புகளையும் 2020-ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதலீடுகளையும் கட்டுப்படுத்தக்கூடும். கணக்கெடுப்பின்படி, வரும் 12 மாதங்களில் உற்பத்தி விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பொலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.