நிலுவை வழக்கிலும் ஆன்லைன் விசாரணை.. நோட்டீஸ் அனுப்ப தயாராகிறது வருமானவரித்துறை

வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் வரி செலுத்துவோர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2020, 11:34 PM IST
  • வரி வழக்குகளில் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களிடமும்,ஆன்லைன் முறையில் விசாரணைக்காக தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.
  • சம்பந்தப்பட்ட வழக்கில் ஆவணங்கள் கூடுதலாக தேவைப்பட்டால், அவற்றை அவர்கள் தாக்கல் செய்யுமாறு, வருமான வரிச். சட்டம் 142 (1)ன் கீழ் புதிய நோட்டீஸ் அனுப்பப்படும்.
நிலுவை வழக்கிலும் ஆன்லைன் விசாரணை.. நோட்டீஸ் அனுப்ப தயாராகிறது வருமானவரித்துறை title=

வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் வரி செலுத்துவோர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த சூழ்நிலையில், ஆன்லைன் மூலம் வருமான வரி விசாரணைகள் நடத்தும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்தது. 

இதில், வரி நோட்டீஸ்களுக்கு, வருமான வரி இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவே விளக்கம் அளித்தால்போதும். சமீபத்தில், ஆன்லைனில் விசாரணை நடத்துவதற்கான, பிரத்யேக இணையளத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.  தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினமான செப்டம்பர் 25ம் தேதி நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது.

 வருமான வரித்துறை அதிகாரிகளை நேரில் சந்திக்காமல் நடைபெறும் இந்த விசாரணையில், ஒருவரின் வரி வழக்கு, அதே பகுதியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிக்கு செல்லாது. மாறாக, நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள அதிகாரிக்கு தானியங்கி முறையில் விசாரணைக்கு அனுப்பப்படும். 

இதனால், வரி செலுத்துவோருக்கு துன்புறுத்தல் இருக்க வாய்ப்பே இல்லை என வருமான வரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இந்த நடைமுறை தொடர்பாக விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இணைய வழி கலந்துரையாடல் கூட்டத்தில், மத்திய நேரடி வரிகள் வாரிய கூடுதல் ஆணையர் ஜெய்ஸ்ரீ சர்மா பேசுகையில், பண பரிவர்த்தனை வழக்குகளும் இந்த ஆன்லைன் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இதுபோல், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளையும் இந்த நடைமுறையில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 எனவே, வரி வழக்குகளில் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களிடமும்,ஆன்லைன் முறையில் விசாரணைக்காக தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். ஆன்லைன் முறையில் விசாரணைக்கு மாறுவதால், ஏற்கெனவே அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட மாட்டாது. அதுவும் செல்லத்தக்கதாகவே இருக்கும். சம்பந்தப்பட்ட வழக்கில் ஆவணங்கள் கூடுதலாக தேவைப்பட்டால், அவற்றை அவர்கள் தாக்கல் செய்யுமாறு, வருமான வரிச். சட்டம் 142 (1)ன் கீழ் புதிய நோட்டீஸ் அனுப்பப்படும்.

 எனவே, தற்போது விசாரணை நடைபெற்று வரும் 148 வழக்குகள் ஆன்லைன் நடைமுறைக்கு மாற்றம் செய்யப்படும். இவற்றுக்கான புதிய நோட்டீஸ்களை தேசிய மின்னணு தணிக்கை அலுவலகம் அனுப்பும். எனவே, செப்டம்பர் 15க்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வரும் என எதிர்பார்க்கலாம் என்றார்.

ALSO READ | மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச்சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...!!!
 

Trending News