மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மூலம் வரி செலுத்துபவர்களுக்கான புதிய வருமான வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வரி விதிப்பு 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஊழியர்களுக்கு பெரும் சேமிப்பைக் கொண்டுவரும். புதிய வரி விதிப்பைத் தேர்ந்தெடுக்கும் மக்கள், பழைய வரி முறைக்கு மாறாக, தங்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தில் வரியைச் சேமிப்பதன் பலன்களைப் பெற முடியும். புதிய வருமான வரி விதிப்பு ஆறு வரி அடுக்குகளை கொண்டுள்ளது, இவை அனைத்தும் ஆண்டு வருமான வரி செலுத்த வேண்டிய வேறுபட்ட சதவீதத்தைக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
யூனியன் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்யும் போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபர் வரி செலுத்துவோருக்கான தள்ளுபடி வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதாவது இனிமேல் ரூ.7 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'தற்போது ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் பழைய மற்றும் புதிய வரி முறைகளில் வருமான வரி செலுத்துவதில்லை. புதிய வரி விதிப்பில் தள்ளுபடி வரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்த நான் முன்மொழிகிறேன். இதனால் புதிய வரி விதிப்பில் ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை' என்று கூறியுள்ளார்.
புதிய வரி முறையின் கீழ் உள்ள ஆறு வருமான வரி அடுக்குகள்:
ரூ 0-3 லட்சம்: இல்லை
ரூ.3-6 லட்சம்: 5 %
ரூ.6-9 லட்சம்: 10 %
ரூ.9-12 லட்சம்: 15 %
ரூ.12-15 லட்சம்: 20 %
15 லட்சத்திற்கு மேல்: 30 %
பட்ஜெட் தாக்குதலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பில் அரசு புதிய வரி திருத்தங்களை மேற்கொண்ட பிறகு, சம்பளம் பெறுபவர்களுக்கு பெரியளவில் சேமிப்பு கிடைக்கும். புதிய வருமான வரி முறையின் கீழ் சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் தங்கள் வரிகளில் பெரும் பகுதியைச் சேமிக்க முடியும்.
ஆண்டு சம்பளம் ரூ 7 லட்சம் - வரி இல்லை
ஆண்டு சம்பளம் ரூ.9 லட்சம்: ரூ.15,000 சேமிப்பு
ஆண்டு சம்பளம் ரூ.12 லட்சம்: ரூ.24,000 சேமிப்பு
ஆண்டு சம்பளம் ரூ.15 லட்சம்: ரூ.37,500 சேமிப்பு
மத்திய பட்ஜெட் 2023ன் படி, வருமான வரி விலக்கு வரம்பு ரூ.50,000 அதிகரித்து ரூ.3 லட்சமாகவும், தள்ளுபடி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ