சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயர தயாராகும் 24 மொபைல் நிறுவனங்கள்...!!!

இந்தியாவை மொபைல் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு அறிவித்த ஊக்க சலுகை அறிவிப்புகளும் திட்டங்களும் பலனளிக்க தொடங்கியுள்ளன.       

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2020, 08:45 PM IST
  • மத்திய அரசின் சலுகை திட்டங்களால், மேம் இன் இந்தியா திட்டத்தில் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன.
  • இந்தியாவில் நிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிக குறைவான அளவாகும்
  • சீனாவிற்கு எதிரான உலக நாடுகளின் நிலைப்பட்டால், அங்கிருந்து வெளியேற ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வந்தன.
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயர தயாராகும்  24 மொபைல் நிறுவனங்கள்...!!! 	 title=

ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் மற்றும் கொரோனா பரவல் ஆகியவை காரணமாக சீனாவில் உள்ள பெரு நிறுவனங்கள், தெற்காசிய நாடுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரந்தன.

குறிப்பாக சீனாவிற்கு எதிரான உலக நாடுகளின் நிலைப்பட்டால், அங்கிருந்து வெளியேற ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வந்தன.

இதனால், இந்தியாவிற்கு அதிக தொழில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதை நிரூபிக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன்பாகவே, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக பேச்சு நடத்தியது.

அதில், தனது உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ, கூடுதல் சலுகைகளையும் விதி தளர்வுகளையும் இந்தியா அறிவிக்க வேண்டும் என்று ஆப்பிள் விரும்பியது.

மேலும் படிக்க | கட்சித் தலைவர்கள் 100 பேரிடமிருந்து பறந்த கடிதம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை..!!!

இதற்கிடையில், சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகத்தின் உற்பத்தியாளர்களான் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டின.

இதற்கு,இந்தியாவை மொபைல் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு அறிவித்த ஊக்க சலுகை அறிவிப்புகளும் முக்கிய காரணமாகும்.

இந்நிலையில், இதே ஊக்க திட்டங்களை மருந்து துறைக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தவிர, ஆட்டோமொபைல், ஜவுளி உற்பத்தி, மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளும் மேற்கண்ட ஊக்க சலுகை திட்டங்களின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா சீன இடையிலான வர்த்தக போர், மற்றும் கொரோனா பரவல் காரணமாக, வியட்நாம், கம்போடியா, மியான்மார், வங்க தேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய அதிக பலனை பெறும் என்று சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!!

இருப்பினும், தொழில் தொடங்குவதில் எளிமை, அந்நிய நேரடி முதலீடுகளுக்கான் விதிகளில் தளர்வுகள் போன்ற அறிவிப்புகள், இந்தியா மீது வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

மத்திய அரசின் இந்த முடிவால், பொருளாதார ஏற்றமும், வேலை வாய்ப்பும் பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எலட்ரானிக் உற்பத்தி துறையில் மட்டும் அடுத்த 5 ஆண்டுகளில் 15,300 கோடி டாலர் (ரூ.11.47 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும், இதன் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில், 5500 கோடி டாலர் (4.12 லட்சம் கோடி) அளவிற்கு இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்யப்படும் எனவும், இதனால், பொருளாதார வளர்ச்சி அரை சதவிகிதம் அதிகரிக்கும் எனவும், பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மொத்த உறப்த்தியில், மேக் இன் இந்தியா திட்டத்தில், தற்போது 15 சதவிகிதமாக உள்ள உற்பத்தியை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கேற்ப, இந்தியாவில் நிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே மிக குறைவான அளவாகும்.

இதன் பலனாக, சீனாவில் இருந்து, சுமார் 24 மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிசாலையை நிறுவும் என தெரிகிறது.

இது உலகின் தொழிற்சாலையாக விளங்கும்  சீனாவிற்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய இழப்பாகும்.

மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்க சலுகை திட்டங்களால், மேம் இன் இந்தியா திட்டத்தில் மேலும் பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கும் எனவும், இதனால், சிமெண்ட், மருத்து துறை, சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு இலாபகரமானதாக அமையும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News