இந்தியாவில் வசிக்கக்கூடிய குடிமக்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆவணத்தால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையானது அனைத்து விதமான செயல்களுக்கும் முக்கியமான ஒன்றாக பயன்படுகிறது. மக்களின் மற்ற முக்கியமான ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி அரசு மக்களுக்கு கூறி வரும் நிலையில் தற்போது நிலத்துக்கும் ஆதார் எண் அவசியம் என்று அரசு கூறியுள்ளது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் கீழ் இந்த பணியை செய்யும். நில ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, நிலத்தின் பதிவுகளை டிஜிட்டல் முறையில் வைக்க ஐபி அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் நில ஆவணங்களின் உதவியுடன் அந்த பதிவுகள் டிஜிட்டல் முறையில் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்று டிஜிட்டல் முறையில் செய்யப்படும் நிலப்பதிவுகள் பல வழிகளில் மக்களுக்கு பலன்களை தரும் என்று கூறப்படுகிறது. இது 3C ஃபார்முலாவின் கீழ் விநியோகிக்கப்படும், எனவே இது அனைவருக்கும் சிறந்த பலனை அளிக்கிறது. இதில் செய்யப்படும் பதிவுகள் மையம், பதிவுகள் சேகரிப்பு, பதிவேடுகளின் வசதி ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கருதப்படுகிறது.
நில பதிவில் 14 இலக்க ULPIN எண், அதாவது உங்கள் நிலத்தின் தனிப்பட்ட எண் வழங்கப்படும், இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் இதனை நீங்கள் நிலத்தின் ஆதார் எண் என்றும் அழைக்கலாம். இந்த நிலத்தின் ஆதார் எண் மூலம் வீட்டில் இருந்தபடியே உங்கள் நிலம் சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் ஒரே கிளிக்கில் சரிபார்த்து கொள்ள முடியும். இதுதவிர இந்த ULPIN-ஐ பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற பல திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ULPIN எண் மூலம் நாட்டில் எங்கும் நிலம் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது என்கிற குழப்பம் உங்களுக்கு ஏற்படாது. நிலத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் பற்றிய முழு விவரம் அனைத்தையும் நீங்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். பின்னர் நிலம் பிரிக்கப்பட்டால், அந்த நிலத்தின் ஆதார் எண் வித்தியாசமாக இருக்கும்.
மேலும் அரசு ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் மூலம் ஆளில்லா விமானம் மூலம் நிலத்தை அளக்கும் முறையையும் விரிவுபடுத்தவுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நிலத்தை அளவீடு செய்வது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது மற்றும் இது துல்லியமாகவும், எளிமையாகவும் இருக்கும். இந்த அளவீடு உங்களுக்கு அதிகாரப்பூர்வ டிஜிட்டல் போர்ட்டலில் கிடைக்கும். தற்போது நாட்டில் 140 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது மற்றும் 125 மில்லியன் ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC Jeevan Tarun Policy: வெறும் ரூ.171 முதலீட்டில் ரூ. 28.24 லட்சம் பெறலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ