ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கா? இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தொடர்பான கட்டணங்களை ஜூலை 1, 2024 முதல் மாற்ற உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2024, 07:46 AM IST
  • ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு.
  • புதிய கட்டணங்கள் ஜூலை முதல் அமல்.
  • வங்கி சில மாற்றங்களையும் செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கா? இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது! title=

ICICI Credit Card: தனியார் வங்கியான ஐசிஐசிஐ, கிரெடிட் கார்டு தொடர்பான கட்டணங்களில் பல புதிய மாற்றங்களை கொன்டுவர உள்ளது. இந்த புதிய மற்றும் திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும் என ஐசிஐசிஐ வங்கி அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை குறைக்க கிரெடிட் கார்டு தொடர்பான பல கட்டணங்களை ஐசிஐசிஐ வங்கி நிறுத்துகிறது. அதே சமயம் பல கட்டணங்களை உயர்த்தி உள்ளது. வங்கி கார்டு மாற்றுக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. 

மேலும் படிக்க | PM Awas Yojana: இந்த அட்டகாசமான வீட்டு வசதி திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்க முடியும்? முழு விவரம் இதோ

இந்த புதிய கட்டணங்கள் மூலம் ஐசிஐசிஐ வங்கி ஜூலை 1, 2024 முதல் அனைத்து கார்டுகளுக்கும் மாற்று கட்டணமாக ரூபாய் 100ல் இருந்து ரூ. 200யாக வசூலிக்கும். மேலும் ஐசிஐசிஐ வங்கி ஜூலை 1 முதல் காசோலை பரிமாற்ற கட்டணமான ரூ.100ஐ நிறுத்தப் போகிறது. அதே சமயம் மற்ற ஊர்களில் இருக்கும் வங்கிக்கு காசோலை செயலாக்கக் கட்டணமாக காசோலை மதிப்பில் 1 சதவீதம் எடுத்துக்கொள்ளப்படும், குறைந்தபட்சம் ரூ. 100 ஆகா இருக்கும். மேலும் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் எடுக்க ரூபாய் 100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை நிறுத்தப்பட உள்ளது. இந்த புதிய திருத்தத்தில் அனைத்து வகையான கார்டுகளுக்கு ஒரே விலை இருக்கும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நெட்வொர்க் மாறுபாட்டைப் பொருட்படுத்தாமல் கட்டணம் ஒரே போல் இருக்கும். கிரெடிட் கார்டு சேரும் கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் இல்லாத கார்டுகளுக்கு என ஒரு பலன்களும் வழங்கப்படாது. இருப்பினும் இது Accelero ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தவிர அனைத்து கார்டுகளுக்கும் பொருந்தும். கிரெடிட் கார்டு சேரும் கட்டணம்/வருடாந்திரக் கட்டணம் இல்லாமல் பெறப்பட்ட கார்டுகளுக்கு, ஸ்டேட்மென்ட் சுழற்சிகளில் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படாது. இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என்றாலும், வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்போடு வரும் காலத்தில் இந்த பாலிசியைத் திருத்துவதற்கும், கார்டில் வருடாந்திரக் கட்டணத்தை வசூலிப்பதற்கும் வங்கிக்கு முழு உரிமை உள்ளது.

அபராத கட்டணங்கள்

அபராதக் கட்டணங்கள் மற்றும் தாமதமான கட்டணங்களுக்கான அபராதம் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும். ஐசிஐசிஐ வங்கி எமரால்டு தனியார் மெட்டல் கிரெடிட் கார்டு மற்றும் ஐசிஐசிஐ வங்கி எமரால்டு கிரெடிட் கார்டு தவிர இந்த கட்டணங்கள் பொருந்தும். ரூ. 100-க்கும் குறைவாக இருந்தால் கட்டணங்கள் இல்லை. ரூ 100 முதல் ரூ 500 வரை இருந்தால் ரூ 100 வசூலிக்கப்படும். ரூ 501 முதல் ரூ 5,000 வரை இருந்தால் ரூ 500 வசூலிக்கப்படும். ரூ 5,001 முதல் ரூ 10,000 வரை இருந்தால் ரூ 750 வசூலிக்கப்படும். ரூ 10,001 முதல் ரூ 25,000 வரை இருந்தால் ரூ 900 வசூலிக்கப்படும். ரூ 25,001 முதல் ரூ 50,000 வரை இருந்தால் ரூ 1000 வசூலிக்கப்படும். ரூ. 50,000க்கு மேல் இருந்தால் ரூ 1200 வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News