கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வரி விலக்கு பெறலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்!

Income tax: வரி செலுத்தும் நபர்கள் வரியில் இருந்து விலக்கு பெற கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2023, 03:19 PM IST
  • வருமான வரி செலுத்துபவர்கள் எப்போதும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு வழி தேடுகிறார்கள்.
  • ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள்.
  • வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வரிகளைக் குறைக்க பல சட்ட முறைகள் உள்ளன.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வரி விலக்கு பெறலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்! title=

Income Tax: இந்தியாவில் சொத்து, செல்வம் மற்றும் வருமானம் மீது வரி விதிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் அல்லது பெருநிறுவன வருவாய் எதுவாக இருந்தாலும், இரண்டுமே அரசாங்க சட்டங்களின்படி வரிகளுக்கு உட்பட்டவை. மக்கள் அல்லது வணிகங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் நிகர மதிப்பும் செல்வ வரிக்கு (Wealth Tax) உட்பட்டது.

வருமான வரி செலுத்துபவர்கள் எப்போதும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கும், ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வரிகளைக் குறைக்க பல சட்ட முறைகள் உள்ளன. வரி செலுத்தும் நபர்கள் வரியில் இருந்து விலக்கு பெற கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD இன் கீழ் விலக்குகள் (Deductions Under Section 80C, 80CCC, And 80CCD):

குடிமக்கள் சில குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்து வருமான வரி விலக்குகளை கோரலாம். இதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்க முடியும்.

மருத்துவச் செலவுகள் - பிரிவு 80D (Medical Expenses - Section 80D):

சம்பளம் பெறும் ஊழியர்கள் மருத்துவக் காப்பீட்டில் வரி விலக்குகளைப் பெறலாம். வாழ்க்கைத் துணைவர்கள், சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களாக இருக்கும் பெற்றோர்கள் ஆகியோரை உள்ளடக்கி ரூ. 50,000 வரை விலக்கு பெறலாம்.

வீட்டுக் கடன் - பிரிவு 24 (Home Loan - Section 24):

வீட்டுக் கடன்கள் இருக்கும் வரி செலுத்துவோர், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியில் விலக்குகளை கோரலாம். இதற்கான வரம்பு ரூ. 2 லட்சம். மேலும் சொத்து வாடகைக்கு விடப்பட்டிருந்தால், அதற்கு வரம்பு இல்லை. 

கல்விக் கடன் - பிரிவு 80E (Education Loan - Section 80E):

கல்விக் கடனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தனிநபர்கள் வரியைச் சேமிக்க முடியும். இதில், வட்டி செலுத்துதலுக்கு விலக்குக்கான அதிகபட்ச வரம்பு இல்லை.

பங்குகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகள் - பிரிவு 80CCG (Shares and Mutual Funds - Section 80CCG):

12 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் குடிமக்கள். ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பங்குகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு கூடுதல் விலக்குகளை அனுபவிக்க முடியும்.

மேலும் படிக்க | Year Ender 2023: ரிசர்வ் வங்கி செய்த முக்கிய மாற்றங்கள், பர்சுக்கு பாதிப்பா?

நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (Long Term Capital Gains)

வரி செலுத்துவோர் நீண்ட கால சொத்துக்களை விற்று வரும் லாபத்தை மீண்டும் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிப் பொறுப்பைக் குறைக்கலாம்.

ஈக்விட்டி பங்குகளின் விற்பனை (Sale of Equity Shares):

பங்குகளை ஓராண்டுக்கும் மேலாக வைத்திருக்கும் நீண்ட கால ஆதாயங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம் ஈக்விட்டி பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

நன்கொடைகள் - பிரிவு 80G மற்றும் 80GGC (Donations - Section 80G and 80GGC):

சமூக காரணங்களுக்காக அல்லது அரசியல் கட்சிகளில் பங்களிக்கும் வரி செலுத்துவோர், NGO -க்கள் அல்லது அரசியல் கட்சிகள் தொடர்புடைய சான்றிதழ்களை வழங்கினால், நன்கொடைத் தொகையில் 50 சதவிகிதம் மற்றும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் 10 சதவிகிதம் வரை விலக்கு கோரலாம், 

வீட்டு வாடகை கொடுப்பனவு - பிரிவு 80GG (House Rent Allowance - Section 80GG):

80GG பிரிவின் கீழ் பணியாளர்கள் வீட்டு வாடகைக் கொடுப்பனவை (HRA) கோரலாம். வருடாந்திர வாடகை 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் இது வரிகளில் நிவாரணம் அளிக்கிறது. நில உரிமையாளரின் பான் கார்டு மற்றும் குத்தகை ஒப்பந்தம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பயணப்படி விடுப்பு (Leave Travel Allowance - LTA):

நிறுவனங்களிடமிருந்து LTA பெறும் நபர்கள், இந்தியாவிற்குள் பயணம் செய்வதன் மூலம் வரி இல்லாத LTA ஐப் பெறலாம். இது நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை பொருந்தும். இந்த பயணங்கள் வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருடனான பயணங்களை உள்ளடக்கி இருக்கும். 

மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டு இந்திய ரயில்வே புரிந்துள்ள சாதனைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News