வீட்டுக்கடனை வேகமாக அடைக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் செய்யுங்கள் பாேதும்..

Tips To Quickly Repay Home Loan : பலர், வீட்டுக்கடனை வாங்கிவிட்டு அதை மாதக்கணக்கில் அடைக்க முடியாமல் பாேராடுவர். இப்படி அவதிப்படாமல் இக்கடனை அடைக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 26, 2024, 12:21 PM IST
  • வீட்டுக்கடனை விரைவில் திரும்ப செலுத்துவது எப்படி?
  • இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
  • இதோ, ஈசி டிப்ஸ்!
வீட்டுக்கடனை வேகமாக அடைக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் செய்யுங்கள் பாேதும்.. title=

Tips To Quickly Repay Home Loan : வங்கி அல்லது நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் இருந்து பெரிய தொகையை கடனாக பெருவதற்கு வீட்டு வீட்டை அடமானமாக வைப்பதே வீட்டுக்கடன் ஆகும். இதற்கான தொகையை மாதா மாதம் தவணை முறையில் கட்ட வேண்டும். இதுவே வீட்டுக்கடன் ஆகும். இது, ஒரு நீண்ட கால கடன் பொறுப்பு. இதற்கான மாதத்தவணைகளை செலுத்துவதோடு மட்டுமன்றி, வட்டி விகிதமும் உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். 

வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்கள், கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும். அது மட்டுமன்றி, வீட்டுக்கடனை விரைவில் திரும்பி செலுத்துவதற்கான வழிகளை உற்று நோக்குவதும் சிறந்ததாகும். அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

அசல்+தவணைத்தொகை:

வீட்டுக்கடனில் மூழ்காமல் இருக்க, மாதத்தவணைகளை சரியாக செலுத்துவது முக்கியம் ஆகும். இந்த தவணைகளை செலுத்தும் போது, அசலையும் சேர்த்து கட்ட வேண்டும். இதனால், அசல்தொகை விரைவில் அடையும். 

மாதத்தவணைகள் அல்லாத தொகை..

மொத்தமாக கடன் தொகையை  செலுத்த முடியாவில்லை என்றாலும், கையில் அவ்வப்போது கிடைக்கும் சிறிய தொகையை அசலாக செலுத்தலாம். மாதாந்திரம் கட்டும் தவணையின் பெரும்பகுதி வட்டியாகவே இருப்பதால் அதனுடன் சேர்த்து அசலின் ஒரு பகுதியை செலுத்தலாம். இதன் மூலம் வட்டியும் படிப்படியாக குறைய வாய்ப்பிருக்கிறது. 

வட்டி விகிதத்தில் கவனம்:

வட்டி விகிதம், கடன் தொகைக்கு ஏற்றவாறு உயரும். இதனால், பொதுவாக கடனுக்கான காலமும் உயர்த்தப்படும். இந்த உத்தியை பலர் ஃபாலோ செய்து வருகின்றனர். இதனால் மொத்த கடன் சுமை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. மாதத்தவணையை அதிகரிக்கும் முறையினால் மட்டுமே கடனை சீக்கிரமாக திரும்ப செலுத்த முடியும். 

மேலும் படிக்க | EPFO கணக்கு இருக்கா? கணக்கில் உள்ள தொகையை எடுக்க எந்த படிவம் தேவை? விவரம் இதோ

இருப்பு பரிமாற்றம்:

வீட்டுக் கடன் இருப்பு பரிமாற்ற வசதியை கருத்தில் கொள்வது விரைவில் வீட்டு கடனை விரைவில் திரும்ப செலுத்துவதற்கு முக்கியம். மற்ற கடன் வழங்குபவர்களுடன் சிறந்த வட்டி விகிதங்களைக் கண்டால் அவர்களிடம் இந்த வீட்டுக்கடனை மாற்றிக்கொள்ளலாம். தற்போது கடன் வழங்கியிருக்கும் நிறுவனம் உங்களுக்கு சரியான சேவை வழங்கவில்லை என்றாலும் கூட, இதை நீங்கள் செய்யலாம். 

முன்பணம்: (Down Payment)

சொத்து மதிப்பில் 20%க்கு மேல் முன்பணத்தை செலுத்தி விடுங்கள். இது உங்களின் அசல் மற்றும் வட்டிச் சுமையைக் குறைத்து, கடனை விரைவாகத் திருப்பிச் செலுத்துவதற்கு வழி வகுக்கும். 

கடனை நிர்வகித்தல்:

பலர், முன் கூட்டியே கடனை அடைக்க முயற்சிப்பர். இது அவசியமான விஷயம்தான் என்றாலும், இதற்கான உபரி தொகையை பயன்படுத்தும் போது கையில் உங்கள் அவசர காலத்திற்கு வைப்பு நிதி இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். கடனை முன் கூட்டியே அடைப்பதனால் என்ன பிரச்சனை வரும், இதனால் நிதி இழப்பு அபாயம் ஏற்படுமா என்பதையும் கணக்கிட்டு கொள்ளவும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 2 மாத நிலுவைத் தொகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News