1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க உதவும் பிபிஎஃப்: SBI -இல் ஆன்லைனில் இப்படி திறக்கலாம்

PPF Account in SBI Bank: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டிலிருந்தே இணையம் அல்லது மொபைல் பேங்கிங் சேவை மூலம் ஆன்லைனில் தங்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2023, 05:45 AM IST
  • பிபிஎஃப் -இல் அதிகபட்ச முதலீடு செய்வதன் மூலம், 25 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க முடியும்.
  • பிபிஎஃப் -இல் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டியை அரசாங்கம் வழங்குகிறது.
  • எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது வங்கியிலும் நீங்கள் பிபிஎஃப்ப் (PPF) கணக்கைத் திறக்கலாம்.
1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க உதவும் பிபிஎஃப்: SBI -இல் ஆன்லைனில் இப்படி திறக்கலாம் title=

PPF Account in SBI Bank: தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்கள் பணத்தை பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கூட்டு வட்டியை அதாவது காம்பவுண்ட் வட்டியை வழங்குகிறது.

பிபிஎஃப் -இல் அதிகபட்ச முதலீடு செய்வதன் மூலம், 25 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க முடியும். பிபிஎஃப் -இல் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டியை அரசாங்கம் வழங்குகிறது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது வங்கியிலும் நீங்கள் பிபிஎஃப்ப் (PPF) கணக்கைத் திறக்கலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டிலிருந்தே இணையம் அல்லது மொபைல் பேங்கிங் சேவை மூலம் ஆன்லைனில் தங்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம். இருப்பினும், இதற்கு உங்கள் சேமிப்புக் கணக்கின் KYC இருப்பது அவசியம் ஆகும். இதற்குப் பிறகுதான் நீங்கள் ஆன்லைனில் பிபிஎஃப் கணக்கைத் திறக்க முடியும்.

வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ -இல் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கலாம்

உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு ஆன்லைனில் எஸ்பிஐ (SBI) கணக்கில் லாக் இன் செய்யவும். வலது பக்கத்தில் ‘Request and enquiries’ என்ற டேப் இருக்கும். அதைக் கிளிக் செய்யவும். டிராப் டவுன் மெனுவிலிருந்து ' New PPF Accounts' என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில் உங்கள் PAN மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். அதன் பிறகு நீங்கள் உங்கள் பிபிஎஃப் கணக்கைத் (PPF Account) திறக்க விரும்பும் கிளைக் குறியீட்டை உள்ளிடவும்.

மேலும் படிக்க | நவீன வசதிகளுடன் ஜொலிக்கும் வந்தேபாரத் ரயில்களில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள்

முகவரி மற்றும் பதிவு எண் போன்ற உங்களின் அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிட்டு, Proceed என்பதைக் கிளிக் செய்யவும். சப்மிட் செய்த பிறகு, உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதாக ஒரு டயலாக் பாக்ஸ் தோன்றும். இப்போது நீங்கள் கொடுக்கப்பட்ட ஆதார் எண்ணுடன் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். கணக்கு திறக்கும் படிவத்தை ‘Print PPF Online Application’ டேபில் இருந்து பிரிண்ட் செய்து, 30 நாட்களுக்குள் KYC ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் படிவத்தை கிளையில் சமர்ப்பிக்கவும்.

எஸ்பிஐ சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

உங்களின் ஆதார் எண் உங்கள் எஸ்பிஐ (SBI) சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணும் செயலில் இருக்க வேண்டும். பிபிஎஃப் கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

முதிர்ச்சியடைந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கிடைக்கும்

புபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. அதன் பிறகு, அதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். பிபிஎஃப் கணக்கைத் தொடங்கிய 5 ஆண்டுகளுக்கு இந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும், நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை எடுத்தால், உங்கள் நிதியில் இருந்து 1% கழிக்கப்படும். பிபிஎஃப் முதலீடுகள் வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்குகளுக்கு தகுதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெண்களுக்கு தீபாவளி பரிசு! உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1 கேஸ் சிலிண்டர் இலவசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News