சில சமயங்களில், நம் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால் அல்லது தொலைதூர பயணங்கள் செல்ல வேண்டியிருந்தால் அல்லது எதிர்பாராத விஷயங்களுக்காக நமக்கு உடனடியாக பணம் தேவைப்படலாம். இந்த சமயத்தில் தேவையான பணம் இல்லாத போது கடன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்போம். நமது சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் தனிநபர் கடன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உங்களிடம் குறைந்த CIBIL மதிப்பெண் இருந்தால், கடனை பெறுவது கடினமாக இருக்கும். எனவே, உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க - இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!
இன்றைய காலக்கட்டத்தில் மக்களுக்குப் பணம் தேவைப்படும்போது, அவர்கள் பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக திருமண செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு கடன் வாங்குவது அதிகரித்து வருகிறது. முன்பைவிட வங்கிகளில் கடன் வாங்குவது அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், இப்போது வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் எளிதாக மாறியுள்ளது. அதேபோல கடன் கொடுக்கும் வங்கிகள் அதிகமாக உள்ளன. மேலும் அதிக ஆவணங்கள் இல்லாமல் உங்களுக்கு விரைவாக கடன் வழங்கப்படுகிறது.
தனிநபர் கடன்கள் வீடு அல்லது பிற சொத்துக்கள் இல்லை என்றாலும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணத்தை வைத்து உங்களது சொந்த தேவைகளுக்கு நீங்கள் செலவு செய்து கொள்ளலாம். வங்கிகள் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் உங்களுக்கு தனி நபர் கடனை வழங்குவதால் இவை பாதுகாப்பற்ற கடன்களாக பார்க்கப்படுகிறது. நீங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் நம்ப உங்கள் CIBIL ஸ்கோரை சரிபார்க்கிறார்கள், இது நீங்கள் உங்கள் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் மற்றும் உங்களது முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை காட்டுகிறது. உங்கள் CIBIL மதிப்பெண் குறைவாக இருந்தால், வங்கிகள் உங்களுக்கு கடன் தர யோசிக்கலாம்.
CIBIL ஸ்கோர் என்றால் என்ன?
CIBIL ஸ்கோர் என்பது பணத்தை நிர்வகிப்பதில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுகிறது. கடன் வாங்குவதையும் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதையும் நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதற்கான அறிக்கை அட்டை போன்றது. நீங்கள் சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், உங்கள் மதிப்பெண் குறையும். உங்கள் CIBIL ஸ்கோர் அதிகமாக இருந்தால், நீங்கள் பணத்தைக் கையாள்வதில் சிறந்தவர் என்று அர்த்தம். மேலும் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால், நீங்கள் கடன் வாங்கக்கூடிய வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.
CIBIL மதிப்பெண் 300 மற்றும் 500க்கு இடையில் இருந்தால், அது மோசமான மதிப்பெண் பெறுவது போன்றது, இது கடன் வாங்குவதை கடினமாக்குகிறது. உங்கள் மதிப்பெண் 550 மற்றும் 600க்கு இடையில் இருந்தால், சராசரியாக இருக்கிறது என்று அர்த்தம். 650க்கும் 750க்கும் இடைப்பட்ட மதிப்பெண் இருந்தால் நல்ல ஒரு எண்ணாக பார்க்கப்படுகிறது. உங்கள் மதிப்பெண் 750 முதல் 900 வரை இருந்தால் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் உங்களது CIBIL மதிப்பெண் 750க்கு அதிகமாக இருந்தாலே கடன் வாங்குவது எளிதாக இருக்கும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் 450 ஆக இருந்தால், தனிப்பட்ட கடனைப் பெறுவது கடினமாக இருக்கலாம், ஏனெனில் நீங்கள் சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை இது காட்டுகிறது. இது வங்கிகள் மற்றும் கடன் கொடுக்கும் பிற நிறுவனங்கள் உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கலாம். இருப்பினும், குறுகிய காலத்திற்கு கடன் வாங்க பல வழிகள் உள்ளன, ஆனால் நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஒருவருக்கு குறைந்த CIBIL மதிப்பெண் இருந்தால், தனி நபர் கடன் பெற ஏதாவது ஒரு சொத்தை காண்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு நிலையான வேலையில் இருந்தால் சம்பள விவரங்களை காண்பிப்பதன் மூலம் வங்கியில் இருந்து கடன் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ