நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீடு ஆகிய இரண்டும் வேண்டுமென்றால் நீங்கள் முதலீடு செய்யவேண்டிய இடம் தபால் அலுவலகம். பெரும்பாலான கிராமப்புற மக்கள் தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானதை பெற்று வருகின்றனர். மக்களின் வசதிக்கேற்ப தபால் அலுவலகங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. தற்போது தபால் அலுவலகம் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் கீழ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகின்றது.
மேலும் படிக்க | Flipkart starts Year End Sale: இவ்வளவு கம்மி விலைகளில் ஸ்மார்ட்போன்களா?
இந்த பிரீமியம் சேமிப்புக் கணக்கின் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச் சேவை போன்ற பல வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளவோ மற்றும் டெபாசிட் செய்துகொள்ளவோ முடியும், இதில் வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டம் மற்ற வங்கிகளைப் போலவே உங்களுக்கு வீட்டிலிருந்தபடியே பல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வசதியினை வழங்குகிறது. இதில் நீங்கள் கடனுதவியும் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் எல்லா வகையான கட்டணத்திற்கு கேஷ்பேக் கிடைக்கும். இதுதவிர இந்த திட்டத்தில் பங்களிப்பதன் மூலம் உங்களுக்கு டெபிட் கார்டுகளும் வழங்கப்படுகிறது.
தபால் நிலையத்தில் இந்த சேமிப்பு கணக்கை 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் திறந்து கொள்ளலாம் மற்றும் கணக்கை தொடங்கும்போது நீங்கள் ரூ.149 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதோடு ஆண்டுதோறும் ரூ.99 மற்றும் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். கணக்கை திறக்கும்போது நீங்கள் ரூ.200 டெபாசிட் செய்யவேண்டியது அவசியம், ஆனால் இவ்வளவு தொகையை கணக்கில் பராமரிக்க வேண்டும் என்கிற நிபந்தனை இந்த திட்டத்தில் கிடையாது. மேலும் இந்த திட்டத்தில் சேர நீங்கள் கேஒய்சி செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இனி வீட்டில் இந்த அளவிற்கு மேல் தங்க நகைகள் வைத்திருக்க முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ