வீட்டிலேயே ITR தாக்கல் செய்யலாம், எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ITR Filing: கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் காரணமாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பல முறை நீட்டிக்கப்பட்டது. எனவே நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், நீங்கள் படிவம் 16 (Form-16) ஐ தற்போது பெற்றிருப்பீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2023, 01:42 PM IST
  • ITR க்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன.
  • ITR ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்.
  • ஐடிஆர் தாக்கல் செய்ய இந்த ஸ்டெப்ஸை பின்பற்றுங்கள்.
வீட்டிலேயே ITR தாக்கல் செய்யலாம், எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள் title=

ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி: சிபிடிடியில் (CBDT) இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் (ITR) செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேதி மீண்டும் மாற்றப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மையில், கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் காரணமாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பல முறை நீட்டிக்கப்பட்டது. எனவே நீநீங்கள் பணிபுரிபவராக இருந்தால், நீங்கள் படிவம் 16 (Form-16) ஐ தற்போது பெற்றிருப்பீர்கள். அப்படி நீங்கள் பெறவில்லை என்றால், கூடிய விரைவில் நீங்கள் இந்த படிவத்தை பெறலாம்.

ITR ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்
தனிப்பட்ட வரி செலுத்துவோர், கடைசி நேரத்தில் எந்தவிதமான அவசரம் அல்லது இடையூறுகளைத் தவிர்க்க, விரைவில் ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் நீங்கள் எந்த வகையான தவறுகளிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள். இப்போது வீட்டிலேயே படிப்படியாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Hurun India 500: பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ்! பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி

ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி?
இ-ஃபைலிங் போர்ட்டல் மற்றும் ஆப் அல்லது பட்டய கணக்காளர் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்ய விருப்பம் உள்ளது. நீங்கள் சொந்தமாக ஐடிஆர் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், உங்களில் பெரும்பாலானோர் அதை வருமான வரித்துறையின் இணையதளத்தில் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும்.

ITR க்கு தேவையான ஆவணங்கள்
- படிவம் 16 (Form 16)
- படிவம் 16A (Form 16A)
- படிவம் 26AS (Form 26AS)
- கேப்பல் ஜென்ஸ் ஸ்டேட்மென்ட் (Capital Gains Statements)
- டெக்ஸ் சேவிங் இன்வெஸ்ட்மென்ட் புரூஃப் (Tax saving investment proof)

ஐடிஆர் தாக்கல் செய்ய இந்த ஸ்டெப்ஸை பின்பற்றுங்கள்
* முதலில் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்.
* இப்போது உங்கள் பயனர் ஐடி (PAN), பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
* இதற்குப் பிறகு, 'இ-ஃபைல்' டேப்பில் 'வருமான வரி ரிட்டர்ன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் வருமானம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் சரியான வருமான வரி அறிக்கை (ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் படிவம்-16 இருந்தால், ஐடிஆர்-1 அல்லது ஐடிஆர்-2ஐப் பயன்படுத்தலாம்.
* இதற்குப் பிறகு, நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் ஆண்டின் அடிப்படையில் மதிப்பீட்டு ஆண்டைத் (AY) தேர்ந்தெடுக்கவும். தற்போது, ​​நீங்கள் 2023-24 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* படிவத்தில் உள்ளிடப்பட்ட எல்லா தரவையும் சரிபார்த்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
* ரிட்டனைச் சமர்ப்பித்த பிறகு, ஆதார் OTP போன்ற கிடைக்கக்கூடிய விருப்பங்கள் மூலம் அதை மின்-சரிபார்க்கவும்.
* இப்போது e-verify வருவாயை பதிவேற்றவும்.

கடைசி கட்டத்தில், நீங்கள் வழங்கிய அனைத்து தகவல்களையும் இருமுறை சரிபார்த்து, படிவத்தைப் பதிவேற்றவும். மேலும் இந்த முறை CBDT சார்பாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்கவும்.

மேலும் படிக்க | புகழின் உச்சத்திற்கு செல்லும் முகேஷ் அம்பானி! புதிய வரலாற்றை உருவாக்கிய ரிலையன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News