பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் ஆகவில்லையா? இனி கவலை வேண்டாம் இதை செய்தால் போதும் !

பிஎஃப் கணக்கு குறித்து நீங்கள் புகாரளிக்க Employeefeedback@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம் அல்லது 1800118005 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Sep 11, 2022, 06:14 AM IST
  • சம்பளம் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
  • கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் சமயத்தில் ஊழியர்களுக்கு செய்தி அனுப்பப்படும்.
  • இபிஎஃப்ஓ இணையதளத்தில் பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் ஆகவில்லையா? இனி கவலை வேண்டாம் இதை செய்தால் போதும் ! title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.  பிஎஃப் கணக்கின் கீழ், ஊழியர் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12-12 சதவீத பங்களிப்பு வழங்கப்பட வேண்டும்.  சம்பளம் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் இந்தத் தொகை கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும், கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் சமயத்தில் ஊழியர்களுக்கு செய்தி அனுப்பப்படும்.  பின்னர் உங்கள் இபிஎஃப்ஓ இணையதளத்தில் லாக் இன் செய்து உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதேசமயம் இப்போது உங்கள் சம்பளத்தில் பிஎஃப்க்கான பணம் எடுக்கப்பட்டுவிட்டது, ஆனால் பணம் உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான செய்திகள் எதுவும் வரவில்லை எனில் அதுகுறித்த நீங்கள் அச்சப்பட தேவையில்லை.  நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பிஎஃப் பணம் குறித்த விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.  இப்போது உங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதை புகார் அளிக்க முதலில் இபிஎஃப்ஓ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும், அதில் ரிஜிஸ்டர் க்ரீவன்ஸ் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.  இப்போது பிஎஃப் உறுப்பினர், இபிஎஸ் ஓய்வூதியம் பெறுபவர், வேலை வழங்குபவர் ஆகியவற்றிலிருந்து ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.  அதனைத்தொடர்ந்து அதில் உள்ள பிஎஃப் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து யூஏஎன் எண் மற்றும் செக்யூரிட்டி கோடை உள்ளிட வேண்டும்.  அதன் பிறகு 'கெட் டீடெய்ல்ஸ்' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ததும், 'கெட் ஓடிபி' ஆப்ஷனுக்கு சென்று பின்னர் உங்களது புகாரை நீங்கள் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க | 50% வரை குறைந்த விமான கட்டணம்; வெறும் 1000 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்

இபிஎஃப்ஓ விதியின்படி, உங்கள் சம்பளத்திலிருந்து நிறுவனம் பிஎஃப் தொகையை கழித்த பின்னர் அந்த தொகையை 15 நாட்கள் வரை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம்.  இபிஎப்ஓ வளங்களும் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் பலன்களைப் பெறலாம்.  மேலும் பிஎஃப் கணக்கு குறித்து நீங்கள் புகார் எதுவும் தெரிவிக்க விரும்பினால் Employeefeedback@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது  1800118005 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க | 10 வினாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் HDFC வங்கி! விண்ணப்பிக்க வழிமுறைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News