FASTag-ல் தவறாக கழிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெறும் முறை!

FASTag என்பது நேரடியாக டோல்  கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பமாகும். ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பம் FASTagல் பயன்படுத்தப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2023, 10:49 AM IST
  • FASTag புகார் கொடுக்கப்பட வேண்டிய இடம் மற்றும் இணையதள விபரங்கள்.
  • FASTag என்பது நேரடியாக டோல் கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பம்.
  • மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடன் சென்ற புகார்.
FASTag-ல்  தவறாக கழிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெறும் முறை! title=

FASTag என்பது நேரடியாக டோல்  கட்டணம் செலுத்தும் தொழில்நுட்பமாகும். ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பம் FASTagல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சமீப காலமாக பலர் சுங்க வரி தொடர்பாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தயானந்த் பச்சௌரி, தனது கார் 175 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட பிறகும் தனது பணம் ஃபாஸ்டேக்கில் இருந்து கழிக்கப்பட்டதாக ஃபாஸ்டேக் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் புகார் அளித்தார். இது போன்ற சந்தர்ப்பங்களில், கழிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற வாகன உரிமையாளருக்கு உரிமை உண்டு. இதற்காக அவர்கள் புகார் கொடுக்க வேண்டும்.

FASTag புகார் கொடுக்கப்பட வேண்டிய  இடம்

FASTag மூலம் தவறாக பணம் கழிக்கப்பட்டால், இந்த புகாரை இரண்டு வழிகளில் செய்யலாம்.  NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) கட்டணமில்லா உதவி எண்-1033 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இல்லை என்றால், உங்கள் பகுதியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் புகார் செய்யலாம். NHAI இணையதளத்தில் வெளியான தகவல்களில் குறிப்பிட்டுள்ளபடி, புகார் உண்மையாக இருந்தால், FASTag மூலம் தவறாகக் கழிக்கப்பட்ட பணம் 20 - 30 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளருக்குத் திருப்பித் தரப்படும்.

மேலும் படிக்க | Business Idea: EV வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால்... லட்சங்களில் சம்பாதிக்கலாம்.!

30 நாட்களில் பணம் திரும்ப கிடைக்கும்

கார் உரிமையாளர்கள் ஃபாஸ்டாக் வழங்கும் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணிலும் புகார் அளிக்கலாம். பல வங்கிகள் FASTag உடன் இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் இந்த வங்கிகளின் ஹெல்ப்லைன் எண்களுடன் தொடர்பு கொள்ள முடியும். உங்களுக்கு ஹெல்ப்லைன் தெரியவில்லை என்றால், NPCI (National Payments Corporation Website of India) இணையதளத்தில் கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் ஹெல்ப்லைன் எண்ணை அறிந்து கொள்ளலாம். இணையதள முகவரி - www.npci.org.in/what-we-do/netc-fastag/netc-fastag-helpline-number என்பதாகும். Paytm உடன் Fastag இணைக்கப்பட்டிருந்தால் அதில் நீங்கள் புகார் செய்யலாம். இதற்கு நீங்கள் 1800-120-4210 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும். நீங்கள் SMS மூலம் சில தகவல்களையும் இணைப்புகளையும் வழங்க வேண்டும்.

FASTag ஆனது RFID குறிச்சொல் வடிவில், வாகன கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும்.  இதன் மூலம் பயணிகள் FASTag உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் நேரடியாக பணம் செலுத்த முடியும்.  ஒவ்வொரு முறையும் கார் அல்லது வாகனங்கள் ஃபாஸ்டேக் உடன் இணைந்த டோல் பிளாசா வழியாக செல்லும் போது, ​​கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

மேலும் படிக்க | பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு 50% ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் கிடைக்குமா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News