இனி இங்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர்... ஆளும் கட்சியின் அதிரடி அறிவிப்பு!

LPG Price Update: ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2023, 08:09 PM IST
  • இந்தாண்டு இறுதியில் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
  • காங்கிரஸ், பாஜக தலைவர்கள் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளனர்.
  • வரும் நாட்களில் அமித்ஷா சத்தீஸ்கரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இனி இங்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர்... ஆளும் கட்சியின் அதிரடி அறிவிப்பு! title=

LPG Price Update: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸின்  மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் தற்போது அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும் போது இங்கு பல கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சியும் இன்று ஸ்டீல் சிட்டி பிலாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியிந்தார். மேலும், அவர் தற்போது சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசாங்கத்தின் பணிகளைப் பாராட்டி பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தை போன்று சத்தீஸ்கரில் உள்ள இல்லத்தரசிகளுக்கும் ரூ.500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் ரஞ்சன், மோடி அரசை குற்றஞ்சாட்டி, மத்திய அரசு இந்து முஸ்லிம்களிடையே கலவரத்தை உருவாக்குகிறது என தெரிவித்தார். இது தவிர, நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணமும் வரவில்லை என கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு இந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளது எனவும் நாடு முழுவதும் வெறுப்பை பரப்பும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது என்றும் பேசினார்.

மேலும் படிக்க | Post Office சேமிப்பு திட்டங்கள் முக்கிய அப்டேட்: இனி வருமான சான்றிதழ் அவசியம், விவரம் இதோ

ரஞ்சித் ரஞ்சன் ராஜஸ்தானில் மானிய விலை எரிவாயு சிலிண்டர் திட்டம் குறித்தும் பேசினார். காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியபோதெல்லாம் மத்திய அரசு பொதுமக்களுக்கு சிலிண்டரில் மானியம் வழங்கவில்லை என்றார். சத்தீஸ்கரை பொறுத்த வரையில், ஒரு சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். விரைவில் நான்கு மாநிலங்களில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போவதாக ரஞ்சித் ரஞ்சன் கூறினார். மாநிலத்தில் உள்ள அமைப்பில் கோஷ்டி பூசல் குறித்த கேள்விக்கு, இருவரிடையே உள்ள கருத்து முரண் என்பது ஒட்டுமொத்தமான பிளவு இல்லை என்றார். 

முக்கிய தலைவர்கள் வருகை

இந்த ஆண்டு இறுதிக்குள் சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பாஜகவின் பல மத்திய அமைச்சர்கள் கடந்த காலங்களில் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் ஓம் மாத்தூரும் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நாட்களில் சத்தீஸ்கரில் பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் வருகையும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPS-95 Higher Pension முக்கிய அப்டேட்: EPFO வைத்த காலக்கெடு, முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News