PM Aasha Scheme: மக்களுக்காக பல வித நலத்திட்டங்களை அறிமுகம் செய்துவரும் மோடி அரசாங்கம் தற்போது விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் மிகப்பெரிய அறிவிப்பை அரசு வெளியிட்டது. அந்த அறிவிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு பரிசு
விவசாயிகளுக்கான பிரதம மந்திரி ஆஷா திட்டத்தைத் (PM Aasha Scheme) தொடரவும், அதன் வரம்பை அதிகரிக்கவும் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். ‘ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் பிரதமர் ஆஷா (அன்னதாதா வருமான பாதுகாப்பு பிரச்சாரம்) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என அவர் தெரிவித்தார்.
PM Aasha Scheme: பிரதமர் ஆஷா திட்டம் என்றால் என்ன?
விவசாயிகளுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் பிரதமர் ஆஷா திட்டத்தை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளுக்கு சிறந்த விலையை வழங்கவும், நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பயிர்களின் விலை MSP க்குக் கீழே சென்றால், அப்போது, அரசாங்கம் கொள்முதல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ஆஷா திட்டதின் கீழ், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் விலை MSP க்குக் கீழே செல்லும் போது, அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
மேலும் படிக்க | தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: IPPB மூலம் இந்த வசதியும் கிடைக்கும்
விவசாயிகள் அதிக பயனடைவார்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்கவும், நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தவும் பிரதம மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA) திட்டத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அதிக பயனடைவார்கள். இந்த திட்டத்தின் காரணமாக பொருட்களின் விலைகளில் ஏற்ற இறக்கம் இருந்தால் அவற்றின் தாக்கம் விவசாயிகளுக்கு அதிகம் தெரியாமல் அரசாங்கம் பாதுகாக்கும்.
35,000 கோடி ரூபாய் செலவாகும்
- 2025-26 வரை 15வது நிதி ஆணையத்தின் போது மொத்த நிதிச் செலவு ரூ.35,000 கோடியாக இருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நேர்த்தியான முறையில் சேவைகளை வழங்க, அரசாங்கம் விலை ஆதரவு திட்டம் (PSS) மற்றும் விலை நிலைப்படுத்தல் நிதி (PSF) திட்டங்களை PM-AASHA இல் ஒருங்கிணைத்துள்ளது.
PM-AASHA இன் ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக செயல்திறனைக் கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இது விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும். இதன் மூலம் பொருட்களில் விலைகளில் வரும் ஏற்ற இறக்கங்களையும் இது கட்டுப்படுத்தும். PM-AASHA திட்டத்தில் இப்போது PSS, PSF, விலை இழப்பு செலுத்தும் திட்டம் (POPS) மற்றும் சந்தை தலையீடு திட்டம் (MIS) ஆகியவற்றின் கூறுகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ