7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்தி: கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, அடுத்த மாதம் அதாவது செப்டம்பரில் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வை அறிவிக்கலாம்.
மத்திய ஊழியர்களுக்கு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் அகவிலைப்படி (DA Hike) தொடர்பாக மற்றொரு நல்ல செய்தி உள்ளது. ஊடகங்களில் அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் என்ற செய்தி ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிகிறது. ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க | New Tax Regime vs Old Tax Regime முக்கிய அப்டேட்: எது அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது?
உண்மையில், தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படியை (Dearness Allowance) அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்கிறது மற்றும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, இது 4 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையில், மத்திய அரசு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் AICPI குறியீட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை DA மற்றும் DR மதிப்பாய்வு செய்து அதிகரிக்கிறது. ஏஐசிபிஐ குறியீட்டின் எண்களைப் பார்த்தால், ஜனவரியில் 132.8 ஆகவும், பிப்ரவரியில் 132.7 ஆகவும், மார்ச்சில் 133.3 ஆகவும், ஏப்ரலில் 134.2 ஆகவும், மே மாதத்தில் 134.7 ஆகவும், ஜூன் மாதத்தில் 136.4 ஆகவும் இருந்தது. ஜூன் மாதத்தில் டிஏ உயர்வு மதிப்பெண் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில், மத்திய ஊழியர்களின் டிஏ தொடர்ந்து மூன்றாவது முறையாக 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும், அது 42ல் இருந்து 46 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் தற்போது யூகிக்கப்படுகிறது.
இம்முறை எவ்வளவு அகவிலைப்படி உயர்வு என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும். ஏனெனில் அரசின் முடிவே இறுதியானது. எனவே அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவையில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
இம்முறை அகவிலைப்படி 4 சதவீதமாக இருந்தால், அது 46 சதவீதமாக உயரும். அதன் மத்திய ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 8,000 ரூபாயில் இருந்து 27000 ரூபாயாக அதிகரிக்கலாம்.
செப்டம்பரில் அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பு?
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அகவிலைபப்டி செப்டம்பரில் அதிகரிக்கப்படும் என்றும், ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறுகின்றன. தற்போது, கிட்டத்தட்ட ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். கடைசியாக, 2023 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி டிஏவில் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக, டிசம்பர் 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் மத்திய அரசு அப்போது அகவிலைப்படியை நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்தியது.
மேலும் படிக்க | ஆக்சிஸ் வங்கியில் டிஜிட்டல் கிசான் கிரெடிட் கார்டு அறிமுகம் - இதோ முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ