Gold rates today: இன்றும் குறைந்தன தங்கம் வெள்ளி விலைகள், உங்கள் ஊரின் விலை நிலவரம் இதோ

புதன்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கூர்மையான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .4,442 ஆக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2021, 03:00 PM IST
  • தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்றும் கடுமையான வீழ்ச்சி.
  • 22 காரட் தங்கத்தின் விலை சென்னையில் 10 கிராம் 42,660 ரூபாயாக உள்ளது.
  • வெள்ளி விலை ரூ .9.10 சரிவைக் கண்டது.
Gold rates today: இன்றும் குறைந்தன தங்கம் வெள்ளி விலைகள், உங்கள் ஊரின் விலை நிலவரம் இதோ  title=

Gold Price Today, March 3: மார்ச் 3, புதன்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கூர்மையான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .4,442 ஆக உள்ளது. முந்தைய அமர்வின் விலையான ரூ .4,494 லிருந்து 52 ரூபாயின் சரிவை தங்கம் கண்டது. இதேபோல், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ .44,420 ஆக இருந்தது.  முந்தையான அமர்வில் இருந்த ரூ .44,940-லிருந்து தங்கம் ரூ .544 குறைந்துள்ளது. ஊடக அறிக்கைகளின் படி, 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையும் சந்தை போக்கைத் தொடர்ந்து குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .520 குறைந்து ரூ .45,420 ஆக உள்ளது.

தேசிய போக்கைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தங்கத்தின் விலை (Gold Price) மாறுபடும். இன்றைய விலையை அறிந்து கொள்ளுங்கள்:

டெல்லி: தேசிய தலைநகரில், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,250 ஆக இருந்தது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,280 ஆக உள்ளது.

சென்னை: 22 காரட் தங்கத்தின் விலை சென்னையில் 10 கிராம் 42,660 ரூபாயாகவும் 24 காரட் தங்கத்தின் விலை 46,540 ரூபாயாகவும் உள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,640 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 47,340 ரூபாயாகவும் உள்ளது.

மும்பை: மும்பையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,420 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .45,420 ஆக வுள்ளது.

ALSO READ: வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு good news: GMS திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, வருமானம்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைகள்

சர்வதேச சந்தையில், தங்கத்தின் (Gold) வீதம் புதன்கிழமை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.25 சதவீதம் குறைந்து 1,733.90 அமெரிக்க டாலராக இருந்தது. அதேசமயம், கடந்த 30 நாட்களில், தங்கத்தின் செயல்திறன் 6.18 சதவீதம் குறைந்துள்ளது. இது 114.20 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

வெள்ளி விலை

தங்கத்தின் முந்தைய நாள் விலையை ஒப்பிடும்போது, வெள்ளி விலை ரூ .9.10 சரிவைக் கண்டது. 10 கிராமுக்கு ரூ .666 என்ற விலை உள்ளது. முந்தைய அமர்வில் இது 10 கிராமுக்கு 675.10 ரூபாயாக இருந்தது.

மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள்

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் 1 கிலோ வெள்ளி நகைகளை வாங்க இன்று ரூ .66,600 செலவாகும். அதேசமயம், சென்னை மற்றும் ஹைதராபாத்தில், 1 கிலோ வெள்ளி (Silver) வாங்க ரூ .72,000 செலவிட வேண்டியிருக்கும்.

ALSO READ: Gold rates today: மக்களை மகிழ்விக்கும் தங்கம்! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News