Gold / Silver Price today: தங்கம் வாங்க இன்னும் தாமதமா? மெல்ல உயர்கிறது தங்கம்!!

இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கலால் வரி மற்றும் பிற வரி வகைகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரத்தை இங்கே காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2021, 12:45 PM IST
  • தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று, 22 கார்ட, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,460 ரூபாயாக உள்ளது.
  • 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 64 ரூபாய் அதிகரித்து 35,680 ரூபாயாக உள்ளது.
  • சென்னையில் ஒரு கிராம் வெள்ளி இன்று 73.40 ரூபாயாக உள்ளது.
Gold / Silver Price today: தங்கம் வாங்க இன்னும் தாமதமா? மெல்ல உயர்கிறது தங்கம்!!  title=

Gold Silver Rates Today April 19, 2021: சமீப காலங்களில் தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த தங்கம் விலை, ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்தே ஏற்றத்தைக் கண்டு வருகிறது. சாமானியர்கள் வாங்கும் அளவு நல்ல வீழ்ச்சியைக் கண்டிருந்த தங்கம் இப்போது சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

தேசிய அளவில் தங்கத்தின்  விலை (Gold Price) 47,300 ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை, இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்தூள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். எனினும், சென்ற வார துவக்கத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று, திங்களன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் வாங்க எவ்வளவு செலவிட வேண்டிருக்கும் என பார்க்கலாம். 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏப்ரல் 19, 2021, இன்று, 22 கார்ட, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (Gold) விலை 4,460 ரூபாயாக உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 4,452 ரூபாயாக இருந்தது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 64 ரூபாய் அதிகரித்து 35,680 ரூபாயாக உள்ளது. நேற்று 8 கிராம் ஆபரணத் தங்கம் 35,616 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

24 காரட் தூய்மையான தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 4,819 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கம் நேற்று 4,811 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை நேற்று 38,488 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவும் இன்று 64 ரூபாய் அதிகரித்து 38,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கலால் வரி மற்றும் பிற வரி வகைகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடுகிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரத்தை இங்கே காணலாம்.
 
முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை நிலவரம்:
மும்பையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,501 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,420 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,420 ஆகவும், கேரளாவில் ரூ.4,418 ஆகவும், டெல்லியில் ரூ.4,627 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,631 ஆகவும், ஒசூரில் ரூ.4,424 ஆகவும், புதுச்சேரியில் ரூ.4,425 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலல்லாமல் வெள்ளியின் (Silver) விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி இன்று 73.40 ரூபாயாக உள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.73.70 ஆக இருந்தது. இன்று அது ரூ.73.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,400 ரூபாயாக உள்ளது. வரி வகைகளை சார்ந்து வெள்ளி விலையும் நாடு முழுவதும் மாறுபடுகிறது. 

ALSO READ:Gold Desire: நிறைய தங்கம் வாங்கி சேர்க்க ஆசையா? இது பெண்களுக்கான பொன் விரதம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News