Gold, Silver Rate Update, 03 February 2021: தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற தாழ்வு காணப்படுகிறது, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இந்நிலையில் தங்கம் மீது தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman), பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் (Union Budget) தாக்கல் செய்தார். அதில்., தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், அது இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் எதிரொலித்துள்ளது.
ALSO READ | Gold Price Today: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.. விலை குறையும் வாய்ப்பு உள்ளதா..!!!
இந்தநிலையில் இன்று தங்கம் விலை (Gold Price) குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ. 4541 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.36328 -க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் (Gold) விலை 8 கிராம் 39400-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை (Silver Rate) 1.70 ரூபாய் குறைந்து 73.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சென்னை நிலவரம்:-
தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 4,541
8 கிராம் 36,328
தங்கம் விலை பட்டியல்: 24 கேரட்
1 கிராம் 4,954
8 கிராம் 39400
வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 73.60
1 கிலோ 73,600
ALSO READ | இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR