இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதங்களை கடந்த ஆண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்திய பிறகு, பலரது சேமிப்பு விருப்பமாக ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் (எஃப்டி) மாறியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் வங்கிகள் எஃப்டிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றது. ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு தபால் அலுவலகங்களும், வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றது. வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் வழங்கப்படும் டெர்ம் டெபாசிட்கள் சிறந்ததா என்பதை விடுத்தது, தபால் நிலையங்கள் அல்லது வங்கிகளில் வழங்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பற்றி யோசிப்பது நல்லது. ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை பொறுத்தவரையில் வங்கிகளை விட, தபால் நிலையங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா...?
தபால் நிலையங்கள் வெவ்வேறு டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 6.8 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகின்றது. மறுபுறம் வங்கி எஃப்டிகளுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதம் இல்லை, டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வருமானம் தபால் நிலையங்கள் வழங்குவதை விட அதிகமாக இருக்கும். தபால் அலுவலகத் திட்டங்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக கருதப்படுகிறது. தபால் அலுவலகங்கள் வழங்கக்கூடிய இந்த திட்டங்கள் அரசாங்கத்தால் காப்பீடு செய்யப்படுகின்றன. வங்கிகளின் எஃப்டிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இது பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிப்பிற்குள்ளாகும்.
வங்கிகள் மற்றும் தபால் நிலைய ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இரண்டும் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை வழங்குகின்றன. வங்கிகளின் எஃப்டிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் மற்றும் தபால் அலுவலக எஃப்டிகள் 5 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க முடியும். சில வங்கிகள் எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இருப்பினும் வருமானத்தைப் பொறுத்தவரை தபால் அலுவலகத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக விளங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ