Cyber Security: இணைய பாதுகாப்பை வலுப்படுத்தவும்! வங்கிகளுக்கு கிளாஸ் எடுக்கும் நிதியமைச்சகம்

Finance Ministry to PSBs: வங்கிகளின் இணைய பாதுகாப்பின் வலிமையை சரிபார்த்து, அதை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2023, 04:59 PM IST
  • வங்கிகளின் இணைய பாதுகாப்பு
  • வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வெளியிட்ட நிதி அமைச்சகம்
  • தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதை வேண்டாம்
Cyber Security: இணைய பாதுகாப்பை வலுப்படுத்தவும்! வங்கிகளுக்கு கிளாஸ் எடுக்கும் நிதியமைச்சகம் title=

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சகம்: வங்கிகள் தொடர்பான புதிய உத்தரவை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களிலிருந்து (cyber security) பாதுகாப்பதற்காக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. UCO வங்கியில் நடந்த சமீபத்திய சம்பவத்தை மனதில் வைத்து, பொதுத்துறை வங்கிகள் தங்கள் டிஜிட்டல் செயல்பாடுகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆதாரங்களின்படி, வங்கிகளின் இணைய பாதுகாப்பின் வலிமையை சரிபார்த்து, அதை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் மற்றும் எதிர்கால இணைய அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
 
உஷார் நிலையில் ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் 

நிதித்துறையில் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், நிதி அமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) இது குறித்து வங்கிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த வாரம் பொதுத்துறை யூகோ வங்கியில் உடனடி கட்டண சேவை (IMPS)) மூலம் சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.820 கோடி தவறாக மாற்றப்பட்டது.

மேலும் படிக்க | Cyber Alert: பாகிஸ்தானின் சைபர் கிரைம் யுத்தம்! இந்த 3 செயலிகளை பயன்படுத்த வேண்டாம்!

NPCI 

IMPS இயங்குதளமானது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) இயக்கப்படுகிறது. ஐஎம்பிஎஸ் மூலம் இரண்டு வங்கிகளுக்கு இடையே பணத்தை உடனடியாக மாற்றலாம். IMPS மூலம் பணத்தை மாற்றிய பிறகு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

யூகோ வங்கி 

யூகோ வங்கியில் உடனடி கட்டண சேவை (IMPS)) மூலம் சிலரின் கணக்குகளுக்கு ரூ.820 கோடி தவறாக மாற்றப்பட்டபோது அந்த வங்கி, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, பணம் செலுத்தியவர்களின் கணக்குகளை முடக்கியதாகவும், ரூ.820 கோடியில், ரூ.649 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் பங்குச் சந்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவறாக அனுப்பப்பட்ட மொத்த தொகையில் 79 சதவீதம் ஆகும். எனினும், இந்த தொழில்நுட்பக் கோளாறு மனிதப் பிழையா அல்லது 'ஹேக்கிங்' முயற்சியால் ஏற்பட்டதா என்பதை யூகோ வங்கி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

மேலும் படிக்க | PM Kisan பயனாளிகளுக்கு ஜாக்பாட் செய்தி, விவசாயிகளின் கணக்கில் ரூ.6000

இதனை அடுத்து, வங்கிகள் தங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

இதற்கு முன்னதாக, பேமெண்ட் கேட்வே நிறுவனம் ஒன்றின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ.16,180 கோடி பறிக்கப்பட்டது; இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மோசடியில் தனிநபர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், மிகப் பெரிய பேமெண்ட் கேவே நிறுவனங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாவது அதிர்ச்சியை அளிக்கிறது. 

மேலும் படிக்க | Online Scam: வங்கியில் பழைய போன் நம்பரை கொடுத்திருக்கிறீர்களா... உடனே அதை மாற்றுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News