GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா?

Finance Minister Nirmala Sitharaman : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையும் இன்று நடத்தப்பட்டது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 22, 2024, 10:48 PM IST
  • ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
  • பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை
  • நிதி அமைச்சர்களின் ஆலோசனைக்கூட்டம்
GST வரி வரம்பில் செய்யப்பட்ட மாற்றங்கள்! பெட்ரோலும் ஜிஎஸ்டிக்குள் வருமா? title=

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: புதிய அரசு அமைந்த பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் நடந்தது. சிறு வரி செலுத்துவோர் பயனடையும் வகையில், ஜிஎஸ்டிஆர் 4ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நிதியமைச்சர் நீட்டித்துள்ளார். கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் வரி அதிகாரிகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய ரூ.20 லட்சமும், உயர் நீதிமன்றத்துக்கு ரூ.1 கோடியும், ரூ.2 கோடியும் என நிர்ணயித்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பொருந்தக்கூடிய வரி விகிதத்தை நிர்ணயம் செய்ய மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிற்குள் கொண்டு வருவதற்கான நோக்கத்தை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மோசடி, அடக்குமுறை அல்லது தவறாக சித்தரித்தல் தொடர்பான வழக்குகள் தவிர, ஜிஎஸ்டி சட்டத்தின் 73-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை அறிவிப்புகளின் மீதான வட்டி மற்றும் அபராதத்தை தள்ளுபடி செய்ய இன்று 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.  

2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில், வழங்கப்பட்ட கோரிக்கை அறிவிப்புகளின் மீதான வட்டி மற்றும் அபராதத்தை தள்ளுபடி செய்ய கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், சிறு வரி செலுத்துவோர் பயனடையும் வகையில், ஜிஎஸ்டிஆர் 4ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிஆர் 1ல் மாற்றங்களைச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிஆர் 1 ஏ என்ற பெயரில் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன்னரே NPS மூலம் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்: பட்டியல் இதோ

ஆதார் பயோமெட்ரிக் பதிவு 

நாடு முழுவதும் பயோமெட்ரிக் ஆதார் பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து இது செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது நாடு முழுவதும் ஒரே சமயத்தில் இல்லாமல், படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

அட்டைப்பெட்டிகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் பயனடைவார்கள். ஸ்பிரிங்லர்கள் மற்றும் சோலார் குக்கர்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு வெளியே தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு நபருக்கு மாதம் ரூ.20,000 தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த தளர்வு மாணவர்கள் அல்லது உழைக்கும் வகுப்பினருக்கானது என்றும் குறைந்தது 90 நாட்கள் தங்கியிருந்தால் அதைப் பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் பெரும் நிவாரணம் அளித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் கூறினார். அதிக எண்ணிக்கையிலான ஜிஎஸ்டி அறிவிப்புகளை அனுப்பியது குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர், 1 லட்சத்து 14 ஆயிரம் வரி செலுத்தும் 1.96% வரி செலுத்துவோருக்கு மட்டுமே மத்திய ஜிஎஸ்டி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அதேசமயம் மாநில அரசுகளின் ஜிஎஸ்டி துறைகள் 14 லட்சத்திற்கும் அதிகமான ஜிஎஸ்டி அறிவிப்புகளை அனுப்பியுள்ளன. எனவே, ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்புவது குறித்து மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நாட்டில் மொத்தம் 50.80 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துவோர் உள்ளனர் என மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க | ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News