அதிக ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு: ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ், தீவிரமாக பரிசீலிக்கும் அரசு

EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு என இரு தரப்பும் சமீபத்தில் இபிஎஸ் 95 -இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தின.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2024, 11:08 AM IST
  • ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு உயர்த்துமா?
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?
  • இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு: ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ், தீவிரமாக பரிசீலிக்கும் அரசு title=

EPS Pension: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மற்றும் மத்திய அரசு EPS 95 ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு கூட்டத்தை நடத்தின. இதில் ஓய்வூதிய உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறுவோர் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் அதிக பங்களிப்பு விகிதங்கள் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அரசாங்கம் தனது பங்களிப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Employee Pension Scheme

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு (Central Government) என இரு தரப்பும் சமீபத்தில் இபிஎஸ் 95 -இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தின. இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத் (Minimum Pension) தொகையை உயர்த்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய அம்சங்காள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்வினைகளைப் பார்க்கும்போது விரைவில் நல்ல செய்தி காத்திருப்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க | சம்பளம், அலவன்சுகள், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது வருகிறது 8வது ஊதியக்குழு?

இனி வரும் நாட்களில் ஓய்வூதிய அமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் வரகூடும். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு உயர்த்துமா? ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் (Minimum Monthly Pension): குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7500 ரூபாயாக உயர்த்த ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை இப்போது அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த உயர்வு முக்கியமானதாக கருதப்படுகின்றது.

ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பு (Wage Ceiling Hike): தற்போது ஓய்வூதியம் பெறக்கூடிய ஊதிய வரம்பு ரூ 15,000 ஆக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம், ஓய்வூதியதாரர்கள் அதிக ஓய்வூதிய பலன்களை பெற முடியும்.

அரசு மற்றும் முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பு (Employee Contribution): மொத்த சம்பளத்தின் அடிப்படையில் அரசு மற்றும் முதலாளி / நிறுவனம் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக ஓய்வூதிய நிதி அதிகரிக்கும்.

பணிக்காலம் மற்றும் ஓய்வூதியம் (Service Period): ஓய்வூதியம் பெறுவதற்கு அவசியமான சேவை காலத்தை 33 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளாக குறைக்க கோரிக்கை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஓய்வூதியம் பெறுவோர் அதிக பலன்களைப் பெறுவார்கள்.

ஓய்வூதிய நிதி

அரசு மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த சந்திப்பின் மூலம் சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரிசீலிக்கப்படும் அம்சங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தால், ஓய்வூதியதாரர்களின் நிதி நிலை மேம்படும். இது அவர்களது எதிர்காலத்தை பாதுகாக்கும். இந்த சந்திப்பு ஓய்வூதியதாரர்களின் (Pensioners) நம்பிக்கையை அதிகரித்துள்ளதோடு, மூத்த குடிமக்கள் மீது அரசு காட்டும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: GPF வட்டி விகித அறிவிப்பு வெளியானது... வட்டி அதிகமானதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News