EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன?

EPFO UAN Update:EPFO, நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களின் யூனிவர்சல் அகவுண்ட் நம்பர் (UAN) ப்ரொஃபைலில் உள்ள பிழைகளை சரிசெய்ய ஒரு கூட்டு அறிவிப்பின் மூலம் நிலையான செயல்பாட்டு நடைமுறையை திருத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2024, 09:26 AM IST
  • ஒரு ஊழியர் தனது பணிக்காலத்தில் எத்தனை விவரங்களை மாற்ற முடியும்?
  • எந்தெந்த விவரங்களை திருத்தலாம்?
  • இவற்றை எத்தனை முறை மாற்ற முடியும்?
EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன? title=

EPFO UAN Update: அலுவலக பணியாளர்கள் அனைவரும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகிக்கின்றது. பணியாளர்கள் தங்கள் மாத சம்பளத்தில் ஒரு தொகையை பிஎஃப் கணக்கில் டெபசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. இபிஎஃப் தொகை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் உதவும் ஒரு மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்குகள் தொடர்பான பல புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. 

EPFO, நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களின் யூனிவர்சல் அகவுண்ட் நம்பர் (UAN) ப்ரொஃபைலில் உள்ள பிழைகளை சரிசெய்ய ஒரு கூட்டு அறிவிப்பின் மூலம் நிலையான செயல்பாட்டு நடைமுறையை திருத்தியுள்ளது. இந்த பிழைகளை சரி செய்யும் போது செயல்முறை தொடர்பான கள அதிகாரிகளையும் இபிஎஃப்ஓ ஈடுபடுத்தியுள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) EPFO ​​இல் கொடுக்கப்பட்டுள்ள தகவலை புதுப்பிக்கலாம். உங்கள் UAN ப்ரொஃபைலைப் (UAN Profile) புதுப்பிக்க இந்த ஆவணங்களை உறுப்பினர்கள் வழங்க வேண்டும்.

மார்ச் 11, 2024 தேதியிட்ட EPFO ​​இன் திருத்தப்பட்ட அறிவிப்பின்படி, பிஎஃப் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது இப்போது உறுப்பினரின் தந்தை/தாயின் பெயரில் உள்ள ஆதார் அட்டை, பான் கார்டு, 10வது அல்லது 12வது மதிப்பெண் பட்டியல் மற்றும் தாய்/தந்தையின் பெயரில் உள்ள ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். ஒரு ஊழியர் தனது பணிக்காலத்தில் எத்தனை விவரங்களை மாற்ற முடியும்? எந்தெந்த விவரங்களை திருத்தலாம்? இவற்றை எத்தனை முறை மாற்ற முடியும்? ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் 11 விவரங்களை மாற்றலாம். ஊழியர்கள் எந்த தகவலை எத்தனை முறை திருத்தலாம் என்பதை இங்கே காணலாம். 

உறுப்பினர் பெயர் - 1 முறை
சாதி - 1 முறை
பிறந்த தேதி - 1 முறை
தந்தை/தாய் பெயர் - 1 முறை
உறவு - 1 முறை
திருமண நிலை - 2 முறை
சேரும் தேதி - 1 முறை
விடுப்பு தேதி - 1 முறை
வெளியேறுவதற்கான காரணம் - 1 முறை
குடியுரிமை - 1 முறை
ஆதார் எண் - 1 முறை

மேலும் படிக்க | No Cost EMI: வாடிக்கையாளர்களை கவரும் வட்டியில்லா கடன் தவணை! செயலாக்க கட்டணம் இல்லையா?

வழக்கமான வேலை நேரங்களில், ஒரு இபிஎஃப் உறுப்பினர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள 11 அம்சங்களில் ஏதேனும் ஒன்றை மாற்ற வேண்டுமானால், அதற்காக ஐந்து முறை கோரிக்கை விடுக்கலாம். 

இந்த ஆவணங்கள் மூலம் நீங்கள் UAN ப்ரொஃபைலை சரிசெய்யலாம் (Documents Required for EPFO UAN Profile Update)

- உறுப்பினரின் பெயர்
- பாலினம்
- பிறந்த தேதி
- தந்தை/தாயின் பெயர்
- திருமண நிலை
- ஆதார் எண்

உறுப்பினரின் உறவு தொடர்பான விஷயங்களில் விவரங்களை சரி செய்ய தாய்/தந்தை பெயரில் இந்த ஆவணங்களை அளிக்க வேண்டும். 

- தாய் / தந்தையின் பாஸ்போர்ட் 
- ரேஷன் கார்டு / PDS கார்டு 
- CGHS/ECHS/Medi-Claim Card/மத்திய/மாநில அரசு வழங்கிய புகைப்படம் கொண்ட PSU கார்டு 
-  ஓய்வூதிய அட்டை 
- தாலுகா போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் அறிவிக்கப்பட்ட நகராட்சி மற்றும் பிறரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
- அரசால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் 
- மத்திய/மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை
- ஜன் ஆதார், MNREGA, ராணுவ கேண்டீன் கார்டு 

பிறந்த தேதியை சரிசெய்ய இந்த ஆவணங்கள் தேவைப்படும்

- பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்
- அங்கீகரிக்கப்பட்ட அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் (இதில் பெயர் மற்றும் பிறந்த தேதி இருக்க வேண்டும்)
- மத்திய/மாநில அரசு சேவைப் பதிவேட்டின் அடிப்படையிலான சான்றிதழ் 
- பிறந்த தேதிக்கான ஆதாரம் உள்ள மருத்துவச் சான்றிதழ் 
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட் 
- ஐடி துறை வழங்கும் PAN
- மத்திய/மாநில அரசின் ஓய்வூதியம் செலுத்தும் ஆணை 
- மத்திய/மாநில யுடி அரசின்CGHS/ECHS/Medi-Claim கார்ட்
- அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வதிவிடச் சான்றிதழ்.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News