PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம்.. புதிய விதிகள் இதோ

EPF Withdrawal Rules: சமீபத்தில் EPF கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளை EPFO திருத்தியுள்ளது.  தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நினைக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் இந்த திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2024, 12:07 PM IST
  • EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகள்.
  • இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
  • முழு விவரம் இதோ.
PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம்.. புதிய விதிகள் இதோ title=

EPF Withdrawal Rules: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. ஊழியர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து 12% தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் சந்தாதாரர்கள் பங்களிக்கும் தொகை முழுவதும் EPF கணக்கிற்கு செல்கிறது. ஆனால், நிறுவனம் செபாசிட் செய்யும் தொகையில் 3.67 சதவீதம் EPF கணக்கிற்குச் செல்கிறது. மீதமுள்ள, 8.33 சதவீதம், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது.

EPF Amount: இபிஎஃப் தொகையை எப்போது எடுக்க முடியும்?

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை பணி ஓய்வுக்குப் பிறகு எடுக்கலாம். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், பகுதியளவு தொகையையோ அல்லது முழு தொகையையும் எடுக்க EPFO அனுமதிக்கிறது. 

எனினும், பகுதியளவு தொகையை எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் EPF கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளை EPFO திருத்தியுள்ளது.  தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நினைக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), இந்த திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

EPF Withdrawal Rules: EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகள்

- EPF கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்க, EPF உறுப்பினர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
- கல்விச்செலவு, வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், திருமணம், நோய் சிகிச்சை ஆகியவற்றுக்காக மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

- EPFO-ன் திரும்பப் பெறுதல் விதிகளின்படி, EPF கணக்கு வைத்திருப்பவர் ஓய்வு பெறுவதற்கு 1 வருடத்திற்கு முன்பு 90 சதவிகிதம் வரையிலான தொகையை எடுக்கலாம். 

- 90 சதவீத தொகையை எடுக்க, இபிஎஃப் உறுப்பினரின் வயது 54 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

- இன்றைய காலகட்டத்தில் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றது. அப்படி பணி நீக்கம் ஏற்பட்டால், EPFO ​​விதிகளின்படி, பணிநீக்கம் செய்யப்பட்டு, பணி ஓய்வு வயதுக்கு முன் இபிஎஃப் உறுப்பினர் வேலையில்லாமல் இருந்தால், அவர் EPF நிதியில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

மேலும் படிக்க | SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோ

- ஒரு மாத வேலையின்மைக்குப் பிறகு ஊழியர் 75% தொகையை கணக்கிலிருந்து எடுக்கலாம்.

- ஒரு புதிய வேலை கிடைத்தவுடன், பணியாளர் மீதமுள்ள 25% நிதியை புதிய EPF கணக்கிற்கு மாற்றலாம்.

- தொடர்ந்து 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், முழுத்தொகையையும் எடுக்கலாம்.

- ஒரு ஊழியர் தொடர்ந்து 5 ஆண்டுகள் EPF கணக்கில் பங்களித்திருந்தால், பணத்தை எடுக்கும்போது அவருக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். 

- முதிர்வுக்கு முன் பணத்தை எடுத்தால் டிடிஎஸ் கழிக்கப்படும்.

- எனினும், 50,000 ரூபாய்க்கு குறைவாக எடுத்தால் டிடிஎஸ் கழிக்கப்படாது.

- உறுப்பினர் பணத்தை எடுக்க PAN கார்டைச் சமர்ப்பித்திருந்தால், 10% TDS கழிக்கப்படும். 

- பான் கார்டு சமர்ப்பிக்கப்படாவிட்டால் 30% கழிக்கப்படுகின்றது.

Partial Withdrawal: இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பகுதியளவு தொகையை எடுக்க, EPF உறுப்பினர்கள் EPF போர்டல் மற்றும் Umang செயலியில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்/ முதலாளியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பகுதியளவு பணத்தை எடுக்க விண்ணப்பித்த பிறகு இபிஎஃப் சந்தாதாரர்கள் அதன் நிலையையும் ஆன்லைனில் செக் செய்யலாம். 

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News