இன்றைய காலகட்டத்தில் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டும் தொழிலை (Business Idea) செய்யவே அனைவரும் விரும்புகின்றனர். உங்கள் வீடு அல்லது கடை ஏதாவது ஒரு சந்தையில் இருந்து, அந்த இடத்தில் ஏடிஎம் வசதி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும் என நீங்கள் கருதினால், நீங்களே அங்கு ஏடிஎம் -ஐ நிறவி ஒவ்வொரு மாதமும் பெரும் வருமானம் ஈட்டலாம். இப்போது UPI ATM-ம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும். ஏடிஎம் தொடர்பான விரைவான மேம்பாடுகள் அதை முன்பை விட கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. வெவ்வேறு ஏடிஎம்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் மற்றும் கமிஷன்கள் உள்ளன. நீங்கள் இந்தத் தொழிலைத் தொடங்க விரும்பினால், ஹிட்டாச்சி ஏடிஎம்-ன் ஃபரான்சைசைப் பெறலாம். நீங்களும் ATM தொழிலைத் தொடங்க விரும்பினால், உங்களுக்கு எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Hitachi ATM: எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
Hitachi ATM -இன் படி, நீங்கள் அதன் உரிமையை எடுத்து ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், சுமார் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், இதில் சுமார் ரூ. 1 லட்சம் திருப்பித் தரப்படும் (ரீஃபண்டபிள்). மேலும் இதன் கட்டணம் ரூ.50 ஆயிரம் ஆகும். இந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதுடன் பணத்தையும் டெபாசிட்டும் செய்யலாம். அதேசமயம் பணம் எடுக்க மட்டுமே ஏடிஎம் -ஐ நிறுவினால், அதற்கு ரூ.1.25 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். இதில், ரூ.75 ஆயிரம் திருப்பித் தரப்படும், ரூ.50 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த ஏடிஎம் மூலம் பணம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகள் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் Pearl ATM வணிக மாதிரியின் கீழ், வருமானத்திற்கான பல ஸ்லாப்கள் உள்ளன. அவற்றின் படி தொகை கிடைக்கிறது.
2001 ரூபாய் வரையிலான 700 ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு உங்களுக்குப் பணம் கிடைக்காது. இருப்பினும், 701-1400 ரொக்கப் பரிவர்த்தனைகள் வரை, ஒரு பரிவர்த்தனைக்கு 7 ரூபாய் பெறுவீர்கள். 1401-2000 பரிவர்த்தனைகள் வரைஒரு பரிவர்த்தனைக்கு 8.5 ரூபாய் பெறுவீர்கள். 2001க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெறமாட்டீர்கள். இந்த பரிவர்த்தனை எண்கள் அனைத்தும் ரூ.2001 வரையிலான மதிப்புக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகள் ரூ.2001 -க்கு மேல் இருந்தால், ரூ.700 வரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.4 கிடைக்கும். அதேசமயம் 701-1400 பரிவர்த்தனைகளில், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.8 கிடைக்கும். இது மட்டுமின்றி, 1401-2000 பரிவர்த்தனைகள் வரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.9.5 கிடைக்கும். 2000 -க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10.5 கிடைக்கும்.
மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்.... அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்!
உங்கள் ஏடிஎம் மூலம் பணமில்லா பரிவர்த்தனைகள் இருந்தாலும், நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். 1400 பணமில்லா பரிவர்த்தனைகள் வரை ஒரு பரிவர்த்தனைக்கு 1 ரூபாய் பெறுவீர்கள். மேலும் 1400 க்கும் மேற்பட்ட பணமில்லா பரிவர்த்தனைகளில், நீங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் பெறுவீர்கள். வெவ்வேறு வகையான ஏடிஎம்களில் வருமானமும் வேறுபட்டதாக இருக்கும்.
ஹிட்டாச்சி ஏடிஎம்: இந்த ஃபரான்சைஸ் உரிமையை யார் எடுக்க முடியும்?
ஹிட்டாச்சி ஏடிஎம் உரிமையைப் பெற, உங்களிடம் 40-60 சதுர அடி இடம் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உங்கள் கடை அமைந்துள்ள இடத்தில், தினமும் ஏராளமானோர் வந்து செல்வது முக்கியம். அதாவது உங்கள் கடை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள சந்தையில் இருக்க வேண்டும்.
ஹிட்டாச்சி மனி ஸ்பாட் ஏடிஎம் (Hitachi Money Spot ATM) என்பது ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீஸின் வெள்ளை லேபிள் பிராண்டாகும். ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் அனைத்து முக்கிய வங்கிகளுக்கும் சுமார் 65,500 ஏடிஎம்களை நிர்வகிக்கிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 9300க்கும் மேற்பட்ட ஒயிட் லேபிள் ஏடிஎம்களைக் கொண்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமமும் அனுமதியும் பெற்றுள்ளது. ஹிட்டாச்சி நிறுவனம் 29 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் ஏடிஎம்களைக் கொண்டுள்ளது. இது நாட்டின் 570 மாவட்டங்களிலும் 4300 நகரங்களிலும் ஏடிஎம்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் முதன்மை உரிமையையும் வழங்குகிறது. இதன் கீழ் நீங்கள் அதிக வருமானம் ஈட்டலாம். மேலும், உங்களுக்கு கீழ் அருகிலுள்ள பகுதிகளில் பிற ஃப்ரான்சைஸ்களும் திறக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ