Samsung தொழிற்சாலை சீனாவில் இருந்து இந்தியாவில் எங்கு இடம் பெயர்கிறது தெரியுமா?

சீனாவில் இருக்கும் மொபைல் தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுகிறது சாம்சங் நிறுவனம். இதனால், இந்தியாவுக்கு 4,825 கோடி ரூபாய் முதலீடு கிடைப்பதோடு, வேலைவாய்ப்பு அதிகமாவது உட்பட தொழிற்சாலை அமையும் இடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வளர்ச்சி பெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2020, 07:05 PM IST
  • சீனாவில் இருந்து சாம்சங் தொழிற்சாலை வெளியேறுகிறது
  • சாம்சங் நிறுவனத்தின் ஆலை இந்தியாவுக்கு வரவிருக்கிறது
  • கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் சீனாவிடம் மனத்தாங்கல் கொண்டுள்ளன
Samsung  தொழிற்சாலை சீனாவில் இருந்து இந்தியாவில் எங்கு இடம் பெயர்கிறது தெரியுமா? title=
புதுடெல்லி: சீனாவில் இருக்கும் மொபைல் தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றுகிறது சாம்சங் நிறுவனம். இதனால், இந்தியாவுக்கு 4,825 கோடி ரூபாய் முதலீடு கிடைப்பதோடு, வேலைவாய்ப்பு அதிகமாவது உட்பட தொழிற்சாலை அமையும் இடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வளர்ச்சி பெறும்.
 
சீனாவின் வுஹான் (Wuhan) பிராந்தியத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளினால் சர்வதேச சந்தைகள் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் உத்தரபிரதேசத்தில் 9000 கோடிக்கு மேல் முதலீடு செய்யக் காத்திருக்கின்றன. கொரியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் மின்னணு தயாரிப்பாளர்கள் சீனாவிலிருந்து முதலீடுகளை இந்தியாவிற்கு மாற்ற உத்தேசித்துள்ளனர். அதில் உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.  
 
2020 ஆம் ஆண்டில், உள்நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க 16 நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகளை இந்தியா வழங்கியது.
 
 
மத்திய அரசின் $6.65 பில்லியன் திட்டத்தில், சாம்சங் (Samsung) மற்றும் ஆப்பிள் சப்ளையர்களான ஃபாக்ஸ்கான் (Foxconn), விஸ்ட்ரான் (Wistron) மற்றும் பெகாட்ரான் (Pegatron) ஆகியவை அடங்கும்.  
 
சாம்சங்கிற்கு 7 பில்லியன் ரூபாய் அளவில் நிதிச் சலுகைகள் (Finacial benefits) கிடைக்கும் என்று உத்தரபிரதேச அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கூடுதலாக, சாம்சங் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர், அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய வரிக்கு விலக்கு அளிக்கப்படும்.
 
சாம்சங், உத்தரப்பிரதேசத்தில் அமைக்கும் இந்த குறிப்பிட்ட ஆலையில் 510 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், அடுத்த ஆண்டுக்குள் தொழிற்சாலை செயல்பட வேண்டும். சாம்சங் நிறுவனத்திற்கு உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே மொபைல் போன் உற்பத்தி ஆலை இருக்கிறது. இந்த தொழிற்சாலை உலகின் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
 
 
கடந்த சில மாதங்களாக, COVID-19 (Covid-19)ஐ பரப்பியதற்காக சீனா மீது பிற குற்றம் சாட்டுகின்றன. இது சீனாவிற்கு  பின்னடைவாக உள்ளது.  தங்கள் நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பெரும்பாலானவை தொடங்கிவிட்டன. அதேபோல், இந்தியாவும், நாட்டில் சீன செல்வாக்கைப் பற்றி கவலைப்படுகிறது. சீல சீன செயலிகளை தடை செய்த இந்தியா, உள்நாட்டிலேயே தன்னிறைவு பெறும் முயற்சியில் மும்முரமாக செயல்படுகிறது.   
 
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News