Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..!!!

ஆதார் அட்டை என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 10:14 PM IST
  • ஆதார் அட்டை என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது.
  • ஆதார் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும்,
  • ஆதார் அட்டை அரசியலமைப்பு ரீதியாக மிகவும் முக்கியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..!!! title=

ஆதார் அட்டை என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் கார்டு அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. வங்கி கணக்கு ஆனாலும் சரி, அரசு திட்டங்களை பெற வேண்டுமானாலும் சரி, பல விஷயங்களில் ஆதார் தவிர்க்க முடியாததாக உள்ளது.  அத்தகைய சூழ்நிலையில், நம்மிடம் ஆதார் கார்டு இருப்பது மிகவும் அவசியம்.

ஆதார் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும், இந்த 12 இலக்க எண்ணை உருவாக்கி நமக்கு ஆதார் அட்டை வழங்குவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI). இந்த எண் மிகவும் தனித்துவமான எண் ஆகும். ஒருவரது எண் மற்றவருக்கு இருக்காது. 2016 ஆம் ஆண்டின் ஆதார் சட்டத்தில் உள்ள சில விதிகள் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஆதார் அட்டை இன்னும் அரசியலமைப்பு ரீதியாக மிகவும் முக்கியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.

நீங்கள் இன்னும் உங்கள் ஆதார் அட்டை பெறவில்லை என்றால், ஆதார் அட்டை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் உங்களிடம் இல்லை என்பதால், பீதி அடைய வேண்டாம், அந்த நிலையிலும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை தயாரிக்க ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படுகிறது. உங்களிடம் இவை எதுவும் இல்லையென்றாலும், நீங்கள் ஆதார் அட்டையை பெற இரண்டு வழிகள் உள்ளன.

 Head of the family அதாவது, குடும்பத் தலைவரின், ஆதார் அட்டை  இருந்தால், இந்த ஆதார் கார்டை வைத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு தயாரிக்கலாம். UIDAI குடும்பத் தலைவருக்கு உங்களுக்கு இடையிலான உறவு தொடர்பான சான்றைக் கேட்கலாம். ஆவணங்கள் மற்றும் தகவல்களை சரிபார்த்த பிறகு, உங்கள் ஆதார் அட்டை எளிதாக கிடைத்து விடும்.

ALSO READ | PAN கார்டு தொடர்பான தவறுக்கு 10,000 ரூபாய் அபராதம்.... ஜாக்கிரதை..!!!

குடும்ப தலைவர் ஆதார் அட்டை மூலம் பெறும் முந்தைய முறையில் ஆதார் பெறுவத சாத்தியம் இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை பெறலாம். இதற்காக, நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்கு (Aadhaar Enrolment Centre) செல்ல வேண்டும். நீங்கள் இங்கே அறிமுகம் செய்பவரின் உதவியைப் பெறலாம். பதிவாளர் இந்த அறிமுகம் செய்பவரை முறையாக அறிவிப்பார்.  UIDAI இன் பிராந்திய அலுவலகம், அறிமுகம் செய்பவர், அதாவது இண்ட்ரொட்யூஸரை நியமிக்கிறது.  அதாவது அவர் தனிப்பட்டவராக இருந்தபோதிலும் அவர் ஒரு அரசு பணியாளர் போல் கருதப்படுவார். ஆதார் அலுவலகத்தில் சாதாரண நடைமுறை பின்பற்றப்பட்டு,  90 நாட்களுக்குள் ஆதார் அட்டை தபால் மூலம் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.

ALSO READ | ரேஷன் கார்டில் தவறான தகவல்கள் இருந்தால் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.. எச்சரிக்கை..!

Trending News