அமெரிக்காவில் 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு ஜன்னல் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கேபின் சுவரின் ஒரு பகுதி வெடித்து வெளியே காற்றில் பறந்த பிறகு, விமானம் ஓரிகானின் போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. போயிங் 737-9 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் அண்டாரியோவுக்கு செல்ல புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நேர்ந்தது. இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில், அந்த விமானத்தின் நடுவில் உள்ள ‘எக்ஸிட் டோர்’ வெடித்து பறந்திருப்பதைக் காணமுடிகிறது.
இந்நிலையில், இது போன்றச் சம்பவம் ஏதும் ஏற்படாமல் தடுக்க DGCA இந்திய விமான நிறுவனங்களுக்கு சில முக்கிய வழிமுறைகளை வழங்கியது. அனைத்து போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களின் அவசரகால கதவுகளை உடனடியாக ஆய்வு செய்யுமாறு உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸில் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் போது போயிங் 737-9 ரக விமானத்தின் ஜன்னல் மற்றும் பிரதான பகுதியின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை சேதமடைந்து இருந்தாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் ஜன்னல் ஒன்றில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக கேபினுக்குள் அழுத்தம் குறைந்தது. இது தவிர, விமானத்தின் முக்கிய பாகத்தின் சில பகுதிகளும் சேதமடைந்தன.
மேலும் படிக்க | Insurance: 1 ரூபாய் செலவில்லாம கிடைக்கும் காப்பீடு! LPGக்கு ரூ 50 லட்சம் இன்சூரன்ஸ்
விமானத்தில் உள்ள அவசரகால கதவுகளை ஆய்வு செய்வதற்கான உத்தரவு, அலாஸ்கா ஏர்லைன்ஸ் சம்பவத்திற்குப் பிறகு போயிங் 737-8 மேக்ஸ் விமானங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று மூத்த டிஜிசிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிஜிசிஏ அனைத்து இந்திய விமான நிறுவனங்களுக்கும் தங்கள் விமானத்தின் ஒரு பகுதியாக தற்போது இயங்கும் அனைத்து போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களிலும் அவசரகால கதவுகளை ஒரு முறை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், விமானத்தின் சேவை ஏதும் பாதிக்கப்படுமா என்று கேட்ட போது அதிகாரி விமான சேவை பாதிக்கப்படாது என பதிலளித்தார். தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்களிடம், போயிங் 737-8 மேக்ஸ் விமானங்களைக் கொண்டுள்ளன.
Alaska Airlines, a part of the plane broke off and sucked a seat out with it.
The seat was unoccupied thankfully.
What a terrible way to go that would be.#AlaskaAirlines #Planepic.twitter.com/mZPMKpGjV8
— Jack (@JackFought_1) January 6, 2024
போயிங் 737-9 விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது
அலாஸ்கா ஏர்லைன்ஸ் தனது போயிங் 737-9 விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கியுள்ளது. "விமானம் 1282 இல் இன்றிரவு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எங்களது 65 போயிங் 737-9 விமானங்களையும் தற்காலிகமாக தரையிறக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பென் மினிகுசியை மேற்கோள் காட்டி வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. போயிங் ஒரு தனி அறிக்கையில், "தொழில்நுட்ப குழு விசாரணைக்கு உதவ தயாராக உள்ளது" என்று கூறியது. மொத்தம் 171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்குச் சென்ற விமானம் வெள்ளிக்கிழமை மாலை 4.52 மணிக்கு புறப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பிறகு போர்ட்லேண்டிற்குத் திரும்பியது. ஒரு பயணி அனுப்பிய புகைப்படங்களின்படி, விமானத்தின் பியூஸ்லேஜின் பெரும்பகுதி மற்றும் ஒரு ஜன்னல் காணவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ