கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை... அமைச்சர் அளித்த குட்நியூஸ்!

சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 25, 2023, 11:36 AM IST
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள்.
  • கோவை - பொள்ளாச்சி இடையே புதிய சிறப்பு ரயில் சேவை.
  • கோவை-பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும்.
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை... அமைச்சர் அளித்த குட்நியூஸ்! title=

இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 60க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) டிசம்பர் 30 அன்று அயோத்தியில் இருந்து ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில், அமிர்தசரஸ்-டெல்லி, அயோத்தி-ஆனந்த் விஹார், வைஷ்ணோ தேவி-டெல்லி, கோயம்புத்தூர்-பெங்களூரு மற்றும் ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை அடங்கும். இதில், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை

கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். கோயம்புத்தூர் மக்கள் பெங்களூருவுக்குச் செல்ல ஆறு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்தச் சேவையின் மூலம் சுமூகமான மற்றும் விரைவான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் கோவையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ரயிலுக்கான கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

கோவை - பொள்ளாச்சி இடையே புதிய சிறப்பு ரயில் சேவை

கோவை - பொள்ளாச்சி சிறப்பு ரயில் கோயம்புத்தூரில் இருந்து காலையில் புறப்பட்டு பிற்பகலில் பெங்களூரு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற வந்தே பாரத் ரயில் சேவைகள் தமிழகத்திற்கு மத்திய அரசு (Central Government) அளித்துள்ள முக்கியத்துவத்தின் அடையாளம் என்று முருகன் கூறினார். கோவை - பொள்ளாச்சி இடையே தினசரி முன்பதிவு செய்யப்படாத புதிய சிறப்பு ரயிலையும் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொடியேற்று விழாவில் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜனும் கலந்து கொண்டார். இந்த சிறப்பு ரயில் கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சியை 6.25 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.

மேலும் படிக்க | Indian Railways: ஹோட்டல் எல்லாம் தேவையில்லை.... 100 ரூபாயில் ரிடயரிங் ரூம் கிடைக்கும்..!

ரயில்வே துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை

தமிழகத்தின் தொழில்துறை பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்பகுதிகளில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, வேலைக்காக தினந்தோறும் கோவை-பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வந்தே பாரத் முதல் ரயில் சேவை

நாட்டிலேயே முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தமிழகத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும், சென்னையிலிருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | Best Tourist Places: மதுரைக்கு அருகில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News