FD மீதான வட்டி விகிதங்கள்: நாட்டின் பெரிய அரசு வங்கிகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்றான பேங்க ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda), வாடிக்கையாளர்களுக்கு FDயில் சிறந்த வட்டி வருமானத்தை வழங்குகிறது. பேங்க் ஆஃப் பரோடா (BOB) மூத்த குடிமக்களுக்கு 399 நாட்களுக்கு FD மீது 7.65 சதவீத வட்டியை வழங்குகிறது. மற்ற அரசு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்ப்டும் போது, இது ஒரு வருடத்தில் சிறந்த வருமானத்தை கொடுக்கும் வட்டி விகிதமாக கருதப்படுகிறது. குறைந்த கால முதலீட்டில் அதிக வட்டி சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. வட்டி வஃப்ருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள், சிறந்த வட்டியை தரும் கணக்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.
BOB வங்கி FD மீதான வட்டி விபரங்கள்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4 சதவீதம்
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு(Senoir Citizen Schemes): 5.50 சதவீதம்
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.50 சதவீதம்
181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6 சதவீதம்
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.50 சதவீதம்
271 நாட்கள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 1 வருடத்திற்கும் குறைவானது - பொது மக்களுக்கு: 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.75 சதவீதம்
1 ஆண்டு - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்
1 வருடம் முதல் 400 நாட்களுக்கு மேல் - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்
400 நாட்களுக்கு மேல் மற்றும் 2 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்
2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.75 சதவீதம்
3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.00 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.00 சதவீதம்
10 ஆண்டுகளுக்கு மேல் (Court Order Scheme) - பொது மக்களுக்கு: 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.75 சதவீதம்
399 நாட்கள் (பரோடா டிரைகலர் பிளஸ் டெபாசிட் திட்டம் - Baroda Tricolor Plus Deposit Scheme) - பொது மக்களுக்கு: 7.16 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.65 சதவீதம்.
மேலும் படிக்க | விமானத்தில் பயணம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ