Cyber Insurance: இணைய மோசடியில் இருந்து உங்கள் பணத்தை பாதுக்காக்கும் ‘சைபர் காப்பீடு’..!

டிஜிட்டல் யுகத்தில் சைபர் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமானது. அதன் நன்மைகள் என்ன என்பதை விபரமாக அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2023, 11:35 AM IST
  • இணைய சேவைகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன.
  • எனினும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன.
  • இணைய மோசடிகளில் இருந்து உங்கள் வாழ்நாள் வருவாயைப் பாதுகாப்பதற்கான ஒரு வழி காப்பீடு.
Cyber Insurance: இணைய மோசடியில் இருந்து உங்கள் பணத்தை பாதுக்காக்கும் ‘சைபர் காப்பீடு’..! title=

சைபர் இன்சூரன்ஸ்: இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலானோர்,  நிதி பரிவர்த்தனைகள், கட்டணம் செலுத்துவது, டிக்கெட்டுகள் புக் செய்வது  என தங்கள் பணிகள் பலவற்றை ஆன்லைனில் செய்ய முயற்சி செய்கிறார்கள். யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும்  என்றாலும் சரி, அல்லது வருமான வரி செலுத்த வேண்டும் என்றாலும், கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டும்   என்றால், இணைய சேவைகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. எனினும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. சில சைபர் மோசடி செய்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மோசடி செய்பவர்கள் உண்மையாகத் தோன்றும் வகையிலான போலியான செய்திகளை அனுப்பி மக்களை லட்சக்கணக்கில் ஏமாற்றுகிறார்கள். மோசடி செய்பவர்களுக்கு பலியாகி, வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியத்தை இழப்பது  என்பது, ஒருவரை மிகவும் பாதிக்கும் செய்தியாகும். அத்தகைய சூழ்நிலையில், இது போன்ற இணைய மோசடிகளில் இருந்து உங்கள் வாழ்நாள் வருவாயைப் பாதுகாப்பதற்கான ஒரு வழி காப்பீடு ஆகும்.

உண்மையில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. டிஜிட்டல் உலகில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் அச்சுறுத்தல்களைக் குறைக்க சைபர் காப்பீட்டுக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதள மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், சைபர் காப்பீட்டின் தேவையும், இதனால் அதிகரித்துள்ளது. இணையக் காப்பீடு என்பது  அடிப்படையிலான சம்பவத்தால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பதற்காக காப்பீட்டாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தமாகும்.

சைபர் இன்சூரன்ஸ் எடுப்பதன் முக்கியத்துவம்

சைபர் குற்றங்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கும், இழப்புகளை ஈடுகட்டுவதற்கும் சைபர் காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்று உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுடன் இணையக் காப்பீட்டையும் எடுப்பது மிக முக்கியமானதாக மாறியதற்கு இதுவே காரணம். இந்தக் காப்பீட்டுக் கொள்கையில், பாலிசிதாரர் பல வகையான சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் காப்பீடுகளை பெறலாம். உங்களிடம் சைபர் காப்பீடு இருந்தால், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இழக்கும் போது அதற்கான நஷ்ட ஈட்டினை பெறாலாம். உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது உங்கள் இ-வாலட்டைப் பயன்படுத்தி யாராவது மோசடியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்தால், காப்பீட்டு நிறுவனம் அதை ஈடுசெய்கிறது. ஃபிஷிங் மற்றும் மின்னஞ்சல் ஸ்பூஃபிங் போன்ற இணைய குற்றங்களால் ஏற்படும் இழப்புகளையும் காப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்கிறது. இணைய மோசடி, தரவு திருட்டு, சைபர் தாக்குதல், ராம்சோவேர் தாக்குதல் மற்றும் பிளாக்மெயிலிங் ஆகியவற்றிலிருந்து சைபர் காப்பீடு உங்கள் நிதி அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!

தரவுப் பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையக் காப்பீட்டுக்கான விதிமுறை 

உண்மையில், டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பு அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 இன் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க விதிமுறைகள் உள்ளன. சைபர் காப்பீடு இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. அரசாங்க தரவுகளின்படி, ஜூன் 2022 வரை இந்தியாவில் 6.7 லட்சத்திற்கும் அதிகமான இணைய பாதுகாப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைபர் இன்சூரன்ஸ் எடுக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

சைபர் இன்சூரன்ஸ் எடுக்கும் போது, ​​நிறுவனம் வழங்கும் திட்டத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பாலிசியில் என்ன காப்பீடு வழங்கப்படுகிறது என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். பொதுவாக, சைபர் இன்சூரன்ஸ் பாலிசி 10 முதல் 15 வகையான சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. உங்களுக்கு அதிக வரம்பு தேவைப்படும். காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை கவரேஜ் வழங்குகின்றன.

மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News