ITR தாக்கல் தொடர்பாக Income Tax வெளியிட்ட செய்தி என்ன?

 வருமான வரித் துறையின் சமீபத்திய ஐடிஆர் தாக்கல் நிலை செய்தி வந்திருக்கிறது. 2020 டிசம்பர் 31 வரை, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) 4.84 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை (Income Tax Department) உறுதிப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2021, 04:35 PM IST
  • டிசம்பர் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட ஐ.டி.ஆர் நிலவரத்தை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது
  • கடந்த ஆண்டைவிட ஐ.டி.ஆர் கணக்கு தாக்கல் குறைந்துள்ளது
  • அறக்கட்டளைகள் அதிகளவு ஐ.டி.ஆர் கணக்கு தாக்கல் செய்துள்ளன
ITR தாக்கல் தொடர்பாக Income Tax வெளியிட்ட செய்தி என்ன? title=

Income Tax: வருமான வரித் துறையின் சமீபத்திய ஐடிஆர் தாக்கல் நிலை செய்தி வந்திருக்கிறது. 2020 டிசம்பர் 31 வரை, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) 4.84 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை (Income Tax Department) உறுதிப்படுத்தியுள்ளது.

"2020-21 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 4.84 கோடிக்கும் அதிகமானவர்கள் 2020 டிசம்பர் 31 வரை தாக்கல் செய்துள்ளனர்" என்று வருமான வரித்துறை (Income Tax Department) ட்வீட் செய்தது.

தனிநபர்களுக்கான ஐடிஆர் (ITR)தாக்கல் காலக்கெடுவை ஜனவரி 10 வரையும், நிறுவனங்களுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 15 வரை நீட்டித்துள்ளது வருமான வரித் துறை (Income Tax Department).

2018-19 ஆம் ஆண்டிற்கான ஐடிஆர்களை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31, 2019 என நிர்ணயிக்கப்பட்டிருந்த போது, அதுவரை மொத்தம் 5.61 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தனர்.  

Also Read | பைசா செலவில்லாமல் வெறும் 10 நிமிடங்களில் PAN card பெறலாம்..!

நடப்பு ஆண்டில் 2019-20 ஆம் ஆண்டிற்கான தனிநபர்களால் வரிவிதிப்புகளை தாக்கல் செய்வது குறைந்துவிட்டது என்பதை தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. அதே நேரத்தில் வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2020 டிசம்பர் 31 வரை 2.65 கோடிக்கு மேல் ஐடிஆர் -1 (ITR-1) தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இது 2019 ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட 3.09 கோடி என்ற அளவை விடக் குறைவு.

2019 ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட 1.28 கோடியுடன் ஒப்பிடும்போது டிசம்பர் 31 வரை 1.08 கோடிக்கு மேல் ஐடிஆர் -4 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read | இனிமேல் வருமான வரி ஏய்ப்பு செய்வது கடினம்

மொத்த வருமானம் ரூ .50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் தனிநபர்களால் தாக்கல் செய்யப்படுகிறது ஐ.டி.ஆர் -1 சஹஜ் (ITR-1 Sahaj) வருமானம். ஐ.டி.ஆர் -4 சுகம் (ITR-4 Sugam) என்பது தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள் (HUF) மற்றும் நிறுவனங்கள் (வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை தவிர (other than Limited Liability Partnership)) தாக்கல் செய்வது. வணிகம் மற்றும் தொழிலில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானம் ரூ .50 லட்சம் ரூபாய்க்கு அதிகம் இருக்கக்கூடாது என்ற விதிக்கு உட்பட்டது ஐ.டி.ஆர் -4 சுகம் (ITR-4 Sugam).

டிசம்பர் 31 வரை 36.58 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஐ.டி.ஆர் -2 (வாடகை மூலம் வருமானம் பெறுபவர்கள் தாக்கல் செய்வது) தாக்கல் செய்துள்ளனர். ஐ.டி.ஆர் -5  பிரிவில் 7.84 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். ஐ.டி.ஆர் -6 (வணிகங்களால்) தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கின் எண்ணிக்கை 3.82 லட்சம்.

Also Read | PAN Card வைத்திருக்கும் அனைவரும் ITR தாக்கல் செய்ய வெண்டுமா?

2020 டிசம்பர் 31 வரை அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சொத்தின் மூலம் வருமானம் பெற்ற நபர்களால் தாக்கல் செய்யப்படும் ஐடிஆர் -7 பிரிவில் 1.15 லட்சம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News