பண்டிகையை கொண்டாட வந்தாச்சு அமேசான் கிரேட் இண்டியன் தள்ளுபடி விற்பனை!

Amazon.in. Offers: அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை, அதன் வாடிக்கையாளர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே துவங்கிவிடும் என்பதால், தற்போது பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை தொடங்கிவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 7, 2023, 07:17 AM IST
  • அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2023
  • 12 மணி நேரத்திற்கு முன்பே துவங்கிய விற்பனை
  • பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை தொடங்கியது
பண்டிகையை கொண்டாட வந்தாச்சு அமேசான் கிரேட் இண்டியன் தள்ளுபடி விற்பனை!  title=

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2023: Amazon.in இல் சிறந்த சலுகைகள், அட்டகாசமான சேமிப்பு என கவர்ச்சிகரமான திட்டங்களுடன் 5,000 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2023இல் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பண்டிகைக் காலத்தைக் கொண்டாட அமேசான், தனது தள்ளுபடி விற்பனையை துவங்கிவிட்டது. அமேசான் பிரைம் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான விற்பனையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் கடைகளில் இருந்து 24 மணிநேரம் முன்னதாகவே ஷாப்பிங் செய்யலாம். எனவே, பொதுமக்களுக்கு அக்டோபர் 8 முதல் தொடங்கும் விற்பனை,  இப்போது பிரைம் உறுப்பினர்களுக்காக தொடங்கப்பட்டுவிட்டது.

எந்தவொரு பெரிய அமேசான் விற்பனையின் போதும் அமேசானின் (Amazon) சொந்த தயாரிப்பு சாதனங்களுக்கு நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, Fire TV Stick 4Kஐ தள்ளுபடி விலையில் ரூ. 3,199க்கு பெறலாம். 10வது தலைமுறை கிண்டில் ரூ. 6,799க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பப்படும் ஆன்லைன் ஷாப்பிங் இடமாகும் என்று அனைவராலும் பாராட்டப்படும் நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்களின் ஷாப்பிங் செலவுகள் இரட்டிப்பாகும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியாவால் நியமிக்கப்பட்ட நீல்சன் மீடியாவின் ஆய்வின்படி, 75% நுகர்வோர் Amazon.in இல் பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளின் தேர்வைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க | Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு... முன்பதிவு தேதி அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாப்பிங் நிகழ்வான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023), அக்டோபர் 8, 2023 அன்று தொடங்குகிறது, பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் விரைவான மற்றும் நம்பகமான டெலிவரியின் வசதி ஆகியவற்றில் இதுவரை பார்த்திராத சலுகைகளை வாடிக்கையாளர்கள் அனுபவிப்பதற்காக அமேசான் நிறுவனம் முன்னேற்பாடுகளை செய்துவிட்டது.  

ஸ்மார்ட்போன்கள், ஃபேஷன் மற்றும் அழகு, வீடு மற்றும் சமையலறை, உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள் உட்பட பல வகைகளில் 5,000 க்கும் மேற்பட்ட புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படும் நிலயில், அற்புதமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் Amazon.in இன் விற்பனையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்

 Samsung, OnePlus, iQOO, LG, Sony, boAt, Tissot, Fastrack, Tommy Hilfiger, Wipro, Eureka Forbes, Asian Paints, Gillette, Huggies போன்ற பிராண்டுகளின் பொருட்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | அமேசான் தரும் பம்பர் தள்ளுபடி.. ரூ.1500 இருந்தாலே போதும்.. குறைந்த விலையில் 'நச்' லேப்டாப்கள்

Amazon.inல் நடைபெறும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர் எப்படி இருக்கும்? சுருக்கமான கண்ணோட்டம் இது

சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்₹5,699 முதல் கிடைக்கும் என்றால் 5G மொபைல்கள் ₹8,999 முதல் கிடைக்கும்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் துணைக்கருவிகள் ₹99 முதல் கிடைக்கும்
உபகரணங்களுக்கு 65% வரை தள்ளுபடி உண்டு
தொலைக்காட்சிகளுக்கு 60% வரை தள்ளுபடி
வீடு, சமையலறை மற்றும் பிற பொருட்களை ₹49 முதல் வாங்கலாம்
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி
சிறந்த ஃபேஷன் மற்றும் அழகு பிராண்டுகளுக்கு 50-80% தள்ளுபடி

கட்டணமில்லா EMI என்ற மாதாந்திர தவணையில், சிறந்த மொபைல்கள், டிவிகள், உபகரணங்கள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொருட்களை வாங்கலாம். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் கூப்பன்கள் மூலம் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அமேசான் SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்குகிறது. 

மேலும் படிக்க | Flipkart, Amazon Offers: ஆபர்களை அள்ளித்தரும் நிறுவனங்கள்! வெறும் ரூ.32,000க்கு ஐபோன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News