கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி... கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு!

கடன்கள் மூலம்,  கடினமான காலங்களில் நிதி உதவி பெற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை பலருக்கு இருக்கும். அதே நேரத்தில், மக்கள் கடனுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களையும் செலுத்த வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 10, 2023, 09:36 AM IST
கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி... கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு! title=

வங்கிக் கடன்: இன்றைய கால கட்டத்தில், விலைவாசி எல்லாம் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் முக்கிய செலவுகளைச் சமாளிக்க கூட கடனின் உதவியை பெறும் நிலையில் பலர் இருக்கிறார்கள். கடன்கள் மூலம்,  கடினமான காலங்களில் நிதி உதவி பெற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை பலருக்கு இருக்கும். அதே நேரத்தில், மக்கள் கடனுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களையும் செலுத்த வேண்டும். குறைந்த வட்டியை செலுத்த வேண்டும் என்று தன பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அதிக வட்டி செலுத்துவது மக்களின் பாக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், கனரா வங்கி ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

கடன்

உண்மையில், கனரா வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பால், மக்கள் இப்போது கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இது மக்களின் பாக்கெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுத் துறையான கனரா வங்கி பல்வேறு முதிர்வு காலங்களுக்கான அதன் முக்கியக் கடன் விகிதங்களை 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!

MCLR 8.75 சதவீதமாக அதிகரிப்பு

பங்குச் சந்தைகளுக்கு அனுப்பிய தகவலில், பல்வேறு முதிர்வு காலங்களுக்கான நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 0.05 சதவீதம் அதிகரித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. புதிய கட்டணம் நவம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. இப்போது ஒரு வருட எம்சிஎல்ஆர் 8.75 சதவீதமாக இருக்கும். தற்போது இந்த விகிதம் 8.70 சதவீதமாக உள்ளது. ஒரு வருட MCLR அடிப்படையில், வாகனம், தனிநபர் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் விகிதங்களை வங்கிகள் தீர்மானிக்கின்றன.

எம்சிஎல்ஆர் அதிகரிப்பு

கனரா வங்கியும் ஒரு நாள், ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆரை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. தனிநபர் கடன், கார் கடன், பைக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவை வங்கிகளால் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், மக்களின் நிதித் தேவையும் அவர்களின் தேவைப்படும் நேரத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. 

முன்னதாக, கடந்த மாத இறுதியில், கனரா வங்கியின் பங்கு விலை 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து வர்த்தகமானது. அதாவது பங்கின் விலை கடந்த ஒராண்டில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் படிக்க | 'பிக் பாஸ்' ஆர்பிஐ அதிரடி... வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட '5 டாஸ்க்': புதிய விதிகளால் குஷியில் கஸ்டமர்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News