E-commerce தளங்களில் முதல் 4 நாள் பண்டிகை விற்பனை எவ்வளவு தெரியுமா?

பண்டிகைக் கால சிறப்பு விற்பனை தொடங்கிவிட்டது. முதல் 4 நாட்களிலேயே ஈ-காமர்ஸ் வலைதளங்கள் 36000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2021, 02:41 PM IST
  • ஈகாமர்ஸ் தளங்களில் விற்பனை அமோகம்
  • பண்டிகைக் கால விற்பனையின் முதல் 4 நாட்களில் சாதனை
  • 36000 கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்றுத் தீர்ந்தன
E-commerce தளங்களில் முதல் 4 நாள் பண்டிகை விற்பனை எவ்வளவு தெரியுமா?  title=

புதுடெல்லி: பண்டிகைக் கால சிறப்பு சலுகைகளின் பலன்கள் வாடிக்கையாளர்களை கவர்கின்றன. எப்போது விற்பனை தொடங்கும் என்று காத்துக் கொண்டிருந்து தேவையான பொருட்களை மட்டுமல்ல, தேவையில்லாத பொருட்களையும் அள்ளி குவிக்கும் போக்கு தொடர்கிறது.

இதுபோன்ற பண்டிகை கால விற்பனையின் பயன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமா? இல்லை, தொழில்நிறுவனங்களும், பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்களும், ஆன்லைன் விற்பனையாளர்களும், ஈ-காமர்ஸ் தளங்களும் கொள்ளை லாபம் பார்க்கின்றன. 

கொரோனாவினால் கடந்த ஆண்டு பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு பண்டிகைக் காலம் ஓரளவுக்கு களைகட்டியுள்ளது. இதன் தாக்கம் பண்டிகைக்கால சிறப்பு விற்பனைகளிலும் எதிரொலிக்கிறது. இந்த ஆண்டு சலுகை விற்பனைகளைத் தொடங்கிய நான்கே நாட்களில் $ 2.7 பில்லியன் அளவுக்கு  விற்பனை நடந்துள்ளது மலைக்க வைக்கிறது.
 
அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய பண்டிகை வார விற்பனையின் முதல் நான்கு நாட்களில் சமூக வணிகம் மற்றும் மளிகைப்  பொருள் விற்பானை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்கள் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்றுத் தீர்த்துள்ளன. இது சனிக்கிழமை நிலவரம்.

Also Read | Festival Sale: கவர்ச்சிகரமான சலுகை - தள்ளுபடிகள்

கடந்த மாதம் பெங்களூருவைச் சேர்ந்த சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட்சீர் கன்சல்டிங் கணித்த ஈ-காமர்ஸ் தளங்களின் இந்த ஆண்டு மொத்த விற்பனை 36,000 கோடி ரூபாய்க்கு மேல் (4.8 பில்லியன் டாலர்) இருக்கும் என்று கணித்திருந்த்து.

விற்பனையின் முதல் நான்கு நாட்களில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் 18 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் கைப்பேசியின் மோகத்தை புரிந்துக் கொள்ளலாம்.

"கடந்த ஆண்டு ஏழு நாட்கள் மட்டுமே ஆன்லைன் சிறப்பு விற்பனை இருந்த நிலையில், இந்த ஆண்டு  ஒன்பது நாட்கள் வரஒ பண்டிகை விற்பனை நீடிப்பதால், வாடிக்கையாளர் தேவை பண்டிகை வாரத்தின் முதல் பாதியில் குவிந்ததை விட இந்த காலகட்டத்தில் அதிகமாக இருப்பதை கவனிக்க முடிகிறது" ரெட்சீரில் நிறுவனத்தின் பங்குதாரர் என்று உஜ்வால் சவுத்ரி கூறினார்.

ஈ-காமர்ஸ் தளங்கள், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பண்டிகை காலங்களில் 9 பில்லியன் டாலர் மொத்த வர்த்தக மதிப்பை (gross merchandise value) கடக்க வாய்ப்புள்ளது, இது கடந்த ஆண்டை விட 23 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிக் பில்லியன் டேஸ் விற்பனை: மெகா தள்ளுபடி சலுகைகளை வழக்கும் ஃப்ளிப்கார்ட்

மொபைல், வீட்டு சாதனப் பொருட்கள், அழகு மற்றும் ஃபேஷன் என 75 சதவீத வாடிக்கையாளர்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாக ரெட்சீரில் அறிக்கை மதிப்பிடுகிறது.

பல விற்பனையாளர்கள் அதிக அளவு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக 10-30 சதவிகிதம் தள்ளுபடியை வழங்குகின்றனர். சுலபமான கடன் மற்றும் மலிவான வட்டியில் பொருட்கள் கிடைக்கின்றன.  

கடந்த ஆண்டு பண்டிகைக் கால விற்பனையில், ‘இப்போது பொருளை வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (buy now pay later (BNPL) என்ற திட்டத்தின் கீழ் 4-7 சதவிகிதமாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அது 10-15 சதவிகிதமாக உயரும் என்று கூறப்படுகிறது.
 
ஒட்டுமொத்த ஆன்லைன் ஜிஎம்வி இந்த ஆண்டு $ 49-52 பில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த ஆண்டை விட சுமார் 37 சதவிகித வளர்ச்சியாகும்.

Also Read | எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் தங்கம் பரிசு!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News