ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பானது எடுத்துள்ள முடிவின் படி, ஊழியர்கள் தாங்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 ( இபிஎஸ்-95 )-ல் உள்ள திரட்சிகளை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான 232-வது கூட்டத்தில் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) இந்த நடவடிக்கையை பரிந்துரைத்துள்ளது. பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்கள் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிடி கூறியுள்ளது.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் அதிரடி ஆபர்! ரூ.16,499 விலையில் ஆப்பிள் ஐபோன் வாங்கலாம்!
34 ஆண்டுகளுக்கும் மேலாக இபிஎஸ் திட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நபர்களுக்கு விகிதாசார ஓய்வூதிய பலன்களை நீட்டிப்பது பற்றியும் சிபிடி பரிந்துரைக செய்துள்ளது. இதன் வாயிலாக பணியாளர்களுக்கு அதிகளவில் ஓய்வூதிய தொகை கிடைக்கப்பெறும். இபிஎஸ் தொகையை ஆன்லைனில் திரும்பப் பெறுவதற்கு, ஊழியர்களிடம் யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்) மற்றும் இதனுடன் இணைக்கப்பட்ட கேஒய்சி விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கு வேலையில்லாமல் இருக்கும்போது மட்டுமே ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெற முடியும். ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னரே வேலையை விட்டு நின்றுவிட்டால் நீங்கள் ஓய்வூதிய பலன்களை இழந்துவிட நேரிடும், அதேசமயம் உங்களுக்கு பலன்களும் வழங்கப்படும்.
மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ