7th Pay Commission சூப்பர் செய்தி: 46% டிஏ ஹைக், அரியர் தொகையுடன் கிடைக்கும் அதிக சம்பளம்!!

7th Pay Commission: அகவிலைப்படி உயர்வின் பலன் ஒரு கோடி ஊழியர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். ரக்ஷாபந்தனை ஒட்டி அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பு வெளிவரும் என நம்பப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 11, 2023, 03:23 PM IST
  • மே 2023 -க்கான ஏஐசிபிஐ எண்கள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டன.
  • இதில் 0.50 புள்ளிகள் உயர்வு காணப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் அகவிலைப்படி எண்ணிக்கை 45.58% ஆக அதிகரித்துள்ளது.
7th Pay Commission சூப்பர் செய்தி: 46% டிஏ ஹைக், அரியர் தொகையுடன் கிடைக்கும் அதிக சம்பளம்!! title=

7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. விரைவில் அவர்களுக்கு அரசு சார்பில் பெரிய பரிசு வழங்கப்படவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் ஒரு பெரிய தொகை வரவு வைக்கப்படும். அவர்களுக்கு சம்பள உயர்வுடன், அகவிலைப்படி உயர்வின் பலனும் வழங்கப்படும். ஜூலை 2023 முதல் ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அகவிலைப்படி அதிகரிக்கும்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு இந்த பரிசை வழங்கும். சமீபத்தில் ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் கீழ், அகவிலைப்படி விகிதம் 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகின்றது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 46% ஆக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது. 

AICPI தரவு வெளியிடப்பட்டது

அகவிலைப்படி உயர்வின் பலன் ஒரு கோடி ஊழியர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். ரக்ஷாபந்தனை ஒட்டி அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பு வெளிவரும் என நம்பப்படுகின்றது. எனினும், தற்போது, ​​இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் அரசு சார்பில் வரவில்லை. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியிலும் இதற்கான எண்கள் வெளியிடப்படும். இதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகின்றது.  

இதுவரையிலான புள்ளிவிவரங்களைப் பாருங்கள் (டிஏ மதிப்பெண்)

ஜனவரி 2023 – 43.10%
பிப்ரவரி 2023 – 43.80%
மார்ச் 2023 – 44.49%
ஏப்ரல் 2023 – 45.06%
மே 2023 – 45.58%
ஜூன் 2023 - ஜூலை இறுதியில் வெளியிடப்படும்

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... 3 பெரிய குட் நியூஸ்!! DA, HRA மட்டுமல்ல, இதுவும் உயரும்!!

மே 2023 -க்கான ஏஐசிபிஐ எண்கள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டன. இதில் 0.50 புள்ளிகள் உயர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி எண்ணிக்கை 45.58% ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் ஜூலை இறுதியில் வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது. அதன் பிறகு ஜூலை முதல் அகவிலைப்படி அதிகரிப்பு பொருந்தும். இதற்கான அரியர் தொகையும் வழங்கப்படும். 

யாருடைய சம்பளம் எவ்வளவு உயரும்?

1. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 எனில், அதில் அவருக்கு 42 சதவீதம் அதாவது ரூ.7560 அகவிலைப்படி கிடைக்கும். ஆனால் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்தால், மாதம் ரூ. 8,280 ஆக அகவிலைப்படி உயர்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.720 அதிகரிக்கும்.

2. ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.56, 900 எனில், 4% கூடுதல் அகவிலைப்படியின் கீழ், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.2,276 கூடுதலாக பெறுவார். அந்த வகையில் ஆண்டுக்கு ரூ.27,312 லாபம் கிடைக்கும்.

3. ஒருவருக்கு மாதம் ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் கிடைத்தால், அவருக்கு அகவிலைப்படியாக ரூ.44,400 கிடைக்கும். அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டால், இந்தப் தொகை ரூ.42,600 ஆக உயரும். அதாவது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் ரூ. 800 அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது இரட்டை ஜாக்பாட்!! டிஏ உடன் இதுவும் ஏறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News