Budget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ்

Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 23, 2024, 10:08 AM IST
  • வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை.
  • இது நடந்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் வரிச் சுமை பெரிய அளவில் குறையும்.
  • இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் பலரது வீட்டு கனவு நிஜமாகும்.
Budget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ் title=

Budget 2024: பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம், மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வார். இன்று தாக்கல் செய்யபடவுள்ள பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் ஒதுக்கீடுகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. அதேபோல், மத்திய அரசின் உறுதிப்பாட்டை தொடர்ந்து பெற்றுள்ள மலிவு விலை வீடுகள் பிரிவு, மலிவு வீடுகளுக்காகவும் மெட்ரோ நகரங்களுக்கு அருகில் புதிய சேடிலைட் நகரங்களின் வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகின்றது. 

வீட்டுக் கடன்

பெரும்பாலான மக்களால் தம்மிடம் உள்ள பணத்தை கொண்டே வீட்டை வாங்க முடிவதில்லை. இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கடன் பெறுகிறார்கள். இவற்றில் வங்கிக் கடன்கள் முக்கியமாக பெரிய பங்கு வகிக்கின்றன. வங்கிகள் வீடு வாங்க கடன்களை அளித்தாலும் அதிகமான வட்டி விகிதங்கள் (Interest Rate) கடன் வாங்குபவர்களுக்கு பெரும் சுமையாக அமைகின்றன. கடன் தொகையை அவர்கள் கட்டி முடிக்கும் வேளையில் அவர்கள் வாங்கிய கடனை விட அதிக தொகையை அவர்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

- இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

- இது நடந்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் வரிச் சுமை பெரிய அளவில் குறையும்.

= இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் பலரது வீட்டு கனவு நிஜமாகும்.

ரியல் எஸ்டேட் தொழில்துறை நிபுணர்கள் கொண்டுள்ள மற்ற எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்:

- மலிவு விலை வீட்டுவசதி வரையறையின் மறுசீரமைப்பு:

எஸ்எம்எஃப்ஜி க்ருஹஷக்தியின் எம்டி மற்றும் சிஇஓ தீபக் பட்கர், சமூக-பொருளாதார மற்றும் நகரமயமாக்கல், நிதி குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல நகரங்களில் மலிவு விலையில் வீட்டுவசதி வரையறையை மறுசீரமைக்க வேண்டும் என்பதை குட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். 

- ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் விரிவாக்கம்:

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் எம்டி & சிஇஓ கிரிஷ் கௌஸ்கி, பிப்ரவரி 2024 இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி, மலிவு விலை வீடுகளுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பாராட்டுவதாக தெரிவித்தார். குறிப்பாக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை அவர் பாராட்டினார். PMAY திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி வீடுகள் 'அனைவருக்கும் வீடு' என்பதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

மேலும், அதிக வீடுகளை கட்டுவதற்கு வசதியாகவும், மில்லியன் கணக்கான மக்களை வீடு வாங்கும் வரம்பிற்குள் கொண்டு வரவும் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த செயல் மக்கள் நலனிற்கான ஒரு முக்கியமான  நடவடிக்கையாக இருக்கும் என கூறிய அவர், இது மக்களின் வீடு வாங்கும் கனவை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், ஹவுசிங் ஃபனான்ஸ் மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை வழங்கும் என்றும் கூறினார். 

மேலும் படிக்க | Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?

வரவிருக்கும் பட்ஜெட், புவியியல் ரீதியாக வேறுபட்ட போர்ட்ஃபோலியோ, ஆழமான விநியோக கவனம், முக்கிய வாடிக்கையாளர் பிரிவுகள் மற்றும் தனித்துவமான நுகர்வோர் முன்மொழிவுகள் ஆகியவற்றின் காரணமாகக் கொண்டு, ஹவுசிங்க் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் அவற்றின் பலத்தை மேம்படுத்தும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

- மலிவு விலையில் பசுமை வீடுகள் வழங்கலை அதிகரிக்க டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை தேவை.:

மலிவு விலை வீடுகள் நாட்டிற்கான மிக முக்கியமான நீண்டகால திட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பட்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மலிவு விலையில் பசுமை வீடுகளின் விநியோகத்தை அதிகரிக்க டெவலப்பர்களை அரசாங்கம் சரியான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முந்தைய PMAY திட்டம் வெற்றிகரமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, PMAY-U 2.0 திட்டத்தின் திருத்தப்பட்ட வரையறைகளை தாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார். இவை பயனாளிகளின் இலக்கை மேம்படுத்துவதிலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும் அதற்கான தொகையும் உரிய நேரத்தில் வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார். ஆகையால் அரசு இவற்றை பரிசீலுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும் படிக்க | Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News