Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், பல தரப்பு மக்களிடையே பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்வார். நடுத்தர வர்க்கத்தினர், சம்பள வர்க்கத்தினர், விவசாயிகள், பெண்கள், மூத்த குடிமக்கள், தொழிதுறையினர் என அனைவருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்த பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடல் ஓய்வூதியத் திட்டம்
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 66.2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் எற்படும் நிதி தாக்கத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பான முன்மொழிவை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் நெருங்கும்போது இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். அரசு இந்த பட்ஜெட்டில் சமூகப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக முனைப்பு காட்டி வருகின்றது. அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு தொடர்பான தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவதற்கான களத்தை தயார் செய்து வருகிறது. சமீபத்திய தரவுகளின் படி, ஜூன் 20 வரை APY இன் கீழ் இத்திட்டத்தில் மொத்தம் 66.2 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். 2023-24 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் 1.22 கோடி பேர் இதில் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
அடல் பென்ஷன் யோஜனாவின் தொகை அதிகரிக்க வாய்ப்பு
அடல் ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்திருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடல் பென்ஷன் யோஜனாவில் (Atal Pension Yojana) குறைந்தபட்ச கொடுப்பனவை அரசாங்கம் 10,000 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அடல் ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த தொடரும் முயற்சிகள்
அடல் பென்ஷன் திட்டம் ஒரு மிகச்சிறந்த ஓய்வூதிய திட்டமாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் ஏராளமானோர் ஓய்வூதிய பலனை பெற்று வருகிறார்கள். தற்போது இதை இன்னும் மேம்படுத்த சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரைகள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!
தற்போது கிடைக்கு ஓய்வூதியம் எவ்வளவு?
- தற்போது, இந்த திட்டத்தின் கீழ், அரசு உத்தரவாதத்துடன், மாதம், 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
- இந்த தொகை உறுப்பினர்களின் பங்களிப்பைப் பொறுத்தது.
- உறுப்பினர்கள் பங்களிக்கும் பணத்திற்கு ஏற்ப எதிர்காலத்தில் ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு?
இந்த திட்டத்தை பற்றி குறிபிடும்போது, அடல் பென்ஷன் யோஜனா (APY), உத்தரவாதமான ஓய்வூதியத் தொகையுடன் கூடிய மலிவு திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். X இல் அவர் ஒரு பதிவில், இந்த திட்டம் தொடக்கத்தில் இருந்து 9.1% வருமானத்தை அளித்துள்ளது என்றும் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் மேன்மையான திட்டமாக உள்ளது என்றும் கூறினார். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா செயல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார். உறுப்பினர்கள் விரும்பினால், பிரீமியம் செலுத்துவதை நிறுத்திக்கொள்ளவும் வசதி உள்ளது என்றும், அப்படி செய்தாலும், இத்திட்டம் இயல்பாகவே தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடல் பென்ஷன் யோஜனா: இது எப்போது தொடங்கப்பட்டது?
- அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டம் தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- APY திட்டத்தின் மூலம், உறுப்பினர் இறந்தாலோ, அல்லது அவருக்கு ஏதேனும் கடுமையான நோய் ஏற்பட்டாலோ, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 100 சதவீதத்தை 60 வயதில் எடுத்துக்கொள்ளலாம்.
- உறுப்பினர் பணத்தை எடுத்தாலும், டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்.
- வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பட்ஜெட்டில், இதன் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்புள்ளதாக வந்துள்ள செய்தி, APY உறுப்பினர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு உழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ