Budget 2024-25: வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்குமா? அரசின் நோக்கம் என்ன?

Union Budget 2024-25: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் இந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அதிகாரிகள் மூலம் பல அடிப்படை பணிகள் செய்யப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2024, 03:26 PM IST
  • இம்முறை அரசாங்கம் சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடும்.
  • அதில் ஒன்று வேலைவாய்ப்பு.
  • வேலைவாய்ப்பை அதிகரிக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (PLI) நோக்கத்தை அரசாங்கம் அதிகரிக்கப் போகிறது.
Budget 2024-25: வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்குமா? அரசின் நோக்கம் என்ன? title=

Union Budget 2024-25: பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இதையடுத்து ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இம்முறை அரசாங்கம் சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடும். அதில் ஒன்று வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்பை அதிகரிக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (PLI) நோக்கத்தை அரசாங்கம் அதிகரிக்கப் போகிறது. இப்போது தளபாடங்கள், பொம்மைகள், காலணிகள் மற்றும் ஜவுளித் தொழில்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும். இது தவிர, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் (MSMEs) ஊக்குவிக்கப்படும். பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் அரசாங்கத்தின் 100 நாள் அஜெண்டாவின்  ஒரு பகுதியாகும். இவற்றின் மூலம் 2030 க்குள் அரசாங்கம் தனது இலக்குகளை அடைய உதவி கிடைக்கும். 

வரி விலக்குடன், வீட்டுக் கடன் வட்டியிலும் நிவாரணம் பெறலாம்.

இது தவிர நடுத்தர மக்களுக்கு (Middle Class) நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது வரி விலக்கு மட்டுமல்ல, வீட்டுக் கடன்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான வட்டி விகிதங்களின் சலுகைகளையும் உள்ளடக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது. தேர்தலுக்குப் பிறகு இது குறித்து இப்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். எனினும், தேர்தல் முடிவுகளை மனதில் வைத்து அரசு அதற்கேற்ப முடிவு எடுக்கும். 

இதற்கான அடிப்படை பணிகள் ஏற்கனவே அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் இந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அதிகாரிகள் மூலம் பல அடிப்படை பணிகள் செய்யப்பட்டுள்ளன. 100 நாள் திட்டத்தை தயாரிக்கும் பணியை பிரதமர் மோடி யாரிடம் ஒப்படைத்தாரோ, அந்த அதிகாரிகளே இந்த பணியை செய்துள்ளனர். ஜூன் 25 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார வல்லுநர்கள், விவசாயத் துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், சந்தை பங்கேற்பாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இன்னும் பிறரைச் சந்திக்கிறார்.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் RD திட்டம்... மாதம் ரூ.7000 முதலீட்டில் ரூ.12 லட்சம் பெறலாம்...!

PLI திட்டத்தின் பலன்களை வழங்குவதற்கான முன்மொழிவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது

இது தவிர பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களின் கருத்தை நிதியமைச்சர் சனிக்கிழமை கேட்டு தெரிந்துகொள்வார். அதன்பின், மதியம் அவருடன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் பல தொழில்களுக்கு பிஎல்ஐ திட்டத்தின் பலன்களை வழங்குவதற்கான முன்மொழிவு நீண்ட காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக இரசாயனத் துறைக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் குறைவாக முதலீடு செய்கின்றன. ஆனால், பெரிய உலகளாவிய நிறுவனங்களை நாட்டில் உருவாக்கும் திட்டம் அரசுக்கு இருப்பதால், முதலீடுகளின் ஊக்குவிப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

சிறு வணிகர்களை வலுப்படுத்த எம்எஸ்எம்இ (MSMS) பேக்கேஜ் கொண்டு வர திட்டம் உள்ளது. ஆனால் அதன் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, சிறு வணிகர்களுக்கு உதவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த தொகுப்பின் நோக்கம் அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்குவதே ஆகும். ஏனெனில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறை இதுதான்.

தேர்தலின் போது வேலைவாய்ப்புதான் அரசுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது, குறிப்பாக வேலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம். வேலைவாய்ப்பு வழங்குவதில் பாஜக பலவீனமாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.பாஜக பெரும்பான்மையை பெற முடியாமல் போனதற்கான காரணங்களில் இதுவும் ஒரு முக்கிய காரணம் என பலர் கருதுகிறார்கள். சில சிறப்பு வரி விதிகள் மூலம் பெண்களின் வருவாயை அதிகரிக்கவும், அவர்களில் அதிகமானவர்களை வேலைகளில் ஈடுபடுத்தவும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெண்கள் முக்கிய இலக்கு என்பதால் இந்த திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News