Budget 2023: வரி குறைப்பு முதல் நிதிச் சலுகை வரை: சிறு-குறு தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன?

 Budget 2023 expectations on MSMEs: மத்திய பட்ஜெட் 2023 நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வரி குறைப்பு முதல் நிதிச்சலுகை வரை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2023, 04:26 PM IST
  • நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்
  • வரி குறைப்பு முதல் நிதிச்சலுகை வரை
  • சிறு குறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2023: வரி குறைப்பு முதல் நிதிச் சலுகை வரை: சிறு-குறு தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன? title=

budget 2023 expectations; மத்திய பட்ஜெட் 2023-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் வர இருப்பதால், அதனை மனதில் வைத்தே மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு, சமூக பாதுகாப்பு, உற்பத்தி ஊக்குவிப்பு உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் அக்கறையை நிர்மலா சீதாராமன் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

குறிப்பாக, இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் நடுத்தர மக்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இருக்கின்றன. அவர்களுக்கான நிவாரணம் கொடுக்கும் வகையிலும், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கான செலவினங்களை அதிகரிக்கவும், வருமானவரியில் வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்! தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! 

இப்போதைய நிலவரப்படி, சமூக நலத்திட்டங்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஒதுக்கீடுகள் பட்ஜெட் 2023-ல் இருக்கும் என பெரும்பாலானோர் யூகித்துள்ளனர். இதுதவிர பட்ஜெட் 2023-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருவார் என்பதற்கு அவர் இதற்கு முன்பு பேசிய பேட்டிகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். 

வரி மாற்றங்கள்

அதிகளவு வரி செலுத்தும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களின் வரிச் சுமையை குறைக்கும் வகையிலான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எகனாமிக் டைம்ஸ் படி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை அவர் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு 

இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மாதம் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.3% ஆக உயர்ந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக்கு வேலைகளை உருவாக்குவதற்கான சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனை கருத்தில் மத்திய அரசு கொள்ளும் என தெரிவித்துள்ள நிபுணர்கள், 700 மில்லியன் இந்தியர்களை விட அதிகமான சொத்துக்களைக் 21 பணக்கார கோடீஸ்வரர்கள் வைத்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என தெரிவித்துள்ளனர். முதியோர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வரம்பை பட்ஜெட் விரிவுபடுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News