2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய தினமான ஜனவரி 31ஆம் தேதி அன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மாதிரியான ஒரு விலங்கு காப்பீட்டு திட்டம் சேர்க்கப்படலாம். இதில், கால்நடை உரிமையாளர்கள் குறைந்தபட்ச பிரீமியம் செலுத்துமாறு கேட்கப்படலாம்.
இந்த ஆண்டு பட்ஜெட்டை காகிதம் இல்லாத முறையில் வழங்க அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் ஆவணம் மொபைல் பயன்பாட்டில் வெளியிடப்படும். இந்த ஆப்ஸின் பெயர் Union Budget Mobile App ஆகும். இந்த செயலியில் மக்கள் பட்ஜெட் ஆவணங்களின் முழுமையான தொகுப்பைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தொடர்பான மக்களின் எதிர்ப்பார்ப்பு பொய்க்குமா? மெய்யாகுமா?
இணையத்தில் எப்படி பர்க்கலாம்
இந்த ஆப் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பார்த்து கொள்ளும் வசதி உள்ளது. நிதியமைச்சகத்தின் அறிக்கையின் படி (https://www.indiabudget.gov.in/) இந்த ஆப்பினை இந்தியா பட்ஜெட் இணையத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையத்திலும் பொதுமக்கள் பட்ஜெட் சம்பந்தமான தகவல்களை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆப்பில் பார்லிமென்ட்டின் இரு அவைகளின் நடவடிக்கை, அன்றாட அலுவல்கள் பற்றிய தகவல்கள்,அவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் எல்லா தகவல்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். கடந்த 1947 முதல் இப்போது வரையிலான பட்ஜெட் விவாதங்களும் இந்த ஆப்பில் கிடைக்கும். இதன் மூலம் 2023 பட்ஜெட்டினை நேரடியாக பார்க்கலாம்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு தேர்தலை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்வா கிண்டிய நிதி அமைச்சர்
பொதுவாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்தாக சில நாள்களுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சகம் மரபாக மேற்கொள்ளும். பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது கொண்டாடும் விதமாக மத்திய நிதியமைச்சர் ஊழியர்களுக்கு தனது கையால் அல்வா கிண்டி வழங்குவார்.
அந்தவகையில் 2023 பட்ஜெட்டிற்கான அல்லா கிண்டும் நிகழ்ச்சி குடியரசு தினமான இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கவுள்ளார்.
மேலும் படிக்க | Budget 2023: நடுத்தர வர்க்கம் மகிழும் வகையில் வரி அடுக்கில் மாற்றம் இருக்குமா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ