இந்தியாவில் கொரோனா தொற்றி பரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,104 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் (Coronavirus) தாக்கம் கடும் மோசமாக உள்ளது. இந்த சூழலில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு வணிக வளாகங்கள், திரையரங்குகள் எல்லாம் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் நேரம் குறைப்பு
இந்நிலையில் கொரோனா தொற்றுநோயால் எழும் நிலைமையைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (எஸ்.எல்.பி.சி) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதன் கீழ், உத்தர பிரதேச மாநிலத்தில் வங்கிகளின் (Banks) நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இருக்கும். பணம் எடுத்தல், காசோலை, அரசு தொடர்பான வேலைகள் போன்ற முக்கிய வேலைகள் மட்டுமே வங்கி ஊழியர்கள் செய்வார்கள்.
ALSO READ | Alert: இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்க! உடனடியாக இதை செய்யுங்கள்!
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இன்று முதல் மே 15 ஆம் தேதி வரை வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது. தேவை ஏற்பட்டால், இந்த உத்தரவு மேலும் நீடிக்கப்படுலாம்.
50 சதவீத பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR